fbpx

”டெல்லியில் இருந்து கூடிய விரைவில் அழைப்பு வரும்”..!! பிரதமர் மோடியை சந்தித்த பின் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி..!!

திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை பிரதமர் மோடி நேரில் நேற்று திறந்து வைத்தார். மேலும் 20,140 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இதற்காக திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதேபோல், தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை வரவேற்றார்.

தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி லட்சத்தீவில் நடைபெற்ற விழாவிற்கு கலந்துகொள்ள செல்லும்போது, விமான நிலையத்தில் வைத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பிரதமர் தனியாக பேசியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பிரதமருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ”திருச்சி வந்த பிரதமரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. என்னுடைய உடல் நலம் குறித்து விசாரித்தார். பிரதமரை வரவேற்கவும், அவரை வழி அனுப்ப மட்டுமே விமான நிலையம் சென்றேன். டெல்லியில் இருந்து விரைவில் அழைப்பு வரும் என எதிர்பார்க்கிறேன். அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன்’’ என்றார்.

Chella

Next Post

மேல்முறையீடு செய்த பெண்களுக்கு இம்மாதம் முதல் ரூ.1,000..!! வெளியான சூப்பர் குட் நியூஸ்..!!

Wed Jan 3 , 2024
முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதலமைச்சர் முக.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. முதற்கட்டமாக 1.06 கோடி பேருக்கும், இரண்டாம் கட்டமாக நவம்பரில் 7.35 லட்சம் பேருக்கு உரிமைதொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு இம்மாதம் முதலே வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை கோரி […]

You May Like