fbpx

இனி உணவகங்களின் மெனு கார்டில் இந்த தகவல்கள் கட்டாயம்.. FSSAI அறிவிப்பு..

இனி உணவகங்களின் மெனு கார்டில் கலோரி குறித்த தகவல்கள் கட்டாயம் என்று இந்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது..

பெரிய மற்றும் சிறிய அளவிலான உணவகங்கள் தங்களது மெனு கார்டில் இடம்பெற்றுள்ள உணவு வகைகளுடன் அவற்றின் கலோரியையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 நவம்பர் மாதம் இந்த அறிவிப்பை FSSAI வெளியிட்டது. இதனை நடைமுறைக்கு கொண்டு வர உணவக நிறுவனங்களுக்கு ஜனவரி 1, 2022 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் கடந்த ஜூலை 1 வரை அது நீட்டிக்கப்பட்டது. இப்போது இதனை நடைமுறைக்கு கொண்டு வர உணவகங்கள் மீண்டும் கால அவகாசம் கேட்டுள்ளதாக தெரிகிறது.

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த முறை அமலுக்கு வர உள்ளது.. இதன்மூலம் இனி உணவுப் பிரியர்கள் தங்களது ஆர்டரில் உள்ள பர்கர், பீட்சா, பட்டர் சிக்கன் என அதன் சர்விங் அளவைப் பொறுத்து, அவற்றின் கலோரி விவரத்தை மெனு கார்டு மூலம் அறிந்து கொள்ளலாம். கலோரியின் அளவு ‘kcal’ என குறிப்பிடப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.

உணவுப் பொருட்களில் உள்ள கலோரி அளவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த முறையை அமல்படுத்த கூடுதல் அவகாசம் தேவை என்று உணவகங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மெனு கார்டில் கலோரி குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவுப் பாதுகாப்பு அதிகாரி இனோசி ஷர்மா இதுகுறித்து பேசிய போது “மக்கள் தாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இதனை நடைமுறைக்கு கொண்டு வருகிறோம். ஆரோக்கியமே வாழ்வின் வளம். மக்களின் நலனைக் கருதி இதனைக் கொண்டு வருகிறோம். முதலில் பெரிய உணவகத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வரும்.. பின்னர் படிப்படியாக சிறிய உணவகங்களுக்கும் கொண்டு வரப்படும். பெரும்பாலான உணவகங்கள் இதற்கு ஒத்துழைப்பு தந்துள்ளன. சில நிறுவனங்கள் அவகாசம் கேட்டுள்ளன” என்று தெரிவித்தார்..

Maha

Next Post

சீருடையில் மலம் கழித்த 8 வயது சிறுவன் மீது கொதிக்கும் நீரை ஊற்றிய ஆசிரியர்.. அதிர்ச்சி சம்பவம்..

Sat Sep 10 , 2022
கர்நாடகாவில் சீருடையில் மலம் கழித்த 8 வயது சிறுவன் மீது ஆசிரியர் ஒருவர் கொதிக்கும் நீரை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. கர்நாடகா மாநிலம் ராய்ச்சுரு மாவட்டத்தில் உள்ள மஸ்கியில் உள்ள ஸ்ரீ கணமதேஸ்வரா தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுவன், பள்ளி சீருடையில் மலம் கழித்துள்ளார். குழந்தையை தண்டிக்க ஆசிரியர் ஹுலிகெப்பா கொதிக்கும் நீரை ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுவன் 40% காயம் அடைந்து லிங்கசகுரு […]

You May Like