fbpx

ரூ.1000 உரிமைத்தொகையில் அதிரடி மாற்றம்..!! தேர்தலையொட்டி மாஸ் காட்டும் DMK அரசு..!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மார்ச் மாதம் மேலும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

மக்களவை தேர்தலுக்கு திமுக தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். அதேபோல் பூத் கமிட்டி நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுவிட்டனர். பூத் கமிட்டி சார்பாக வாக்காளர்களை சந்திக்கும் பணிகளை திமுக தொடங்கவிட்டது. இன்னொரு பக்கம் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்த ஆளும் திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ரூ.1000க்கு பதிலாக ரூ.1500 கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை கொடுக்க ஆளும் திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த பணம் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்தான் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மறுவாழ்வு முகாம் பெண்களுக்கும் விரிவுபடுத்தபட்டுள்ளது. அதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

105 மறுவாழ்வு முகாம்களை சேர்ந்தவர்களுக்கு இந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 19487 குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இந்த திட்டம் விரிவுபடுத்தபட்டுள்ளது. ஏற்கனவே முகாமில் உள்ள குடும்பத் தலைவருக்கு ரூ.1500, எனைய நபர்களுக்கு ரூ.1000, குழந்தைகளுக்கு ரூ.750 மாதம்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் கூடுதலாக இப்போது இந்த தொகையும் வழங்கப்படுகிறது.

English Summary : TN Government 1000 Rupees Scheme

Read More : Snake | உலகின் மிகப்பெரிய பாம்பு அமேசானில் கண்டுபிடிப்பு..!! 200 கிலோ எடை, 26 அடி உயரம்..!!

Chella

Next Post

லோக்சபா தேர்தலை டார்கெட் செய்யும் Vijay..!! கிட்டத்தட்ட நெருங்கியாச்சு..!! பிரம்மாண்ட மாநாடு எப்போது..?

Fri Feb 23 , 2024
நடிகர் விஜய் புதிதாகத் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அவரது கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. Vijay | நடிகர் விஜய் இம்மாத தொடக்கத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துள்ள விஜய், 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், கட்சி அறிவிப்புடன் […]

You May Like