fbpx

உயிருள்ள விஷப் பாம்பை உணவாக சாப்பிடும் ஒட்டகம்..!! என்ன காரணம் தெரியுமா..? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க..!!

நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாம்பு கடியால் உயிரிழக்கின்றனர். பாம்புகள் மனிதர்களுக்கு மட்டுமல்ல புலி, சிங்கம், யானை போன்ற சக்தி வாய்ந்த விலங்குகளுக்கும் ஆபத்தானவை தான். ஆனால், பொதுவாக சைவ உணவு உண்ணும் ஒரு விலங்கு விஷப்பாம்பை மருந்தாக சாப்பிடும். இதைப் பற்றி அறிந்தால் நீங்கள் அதிர்ச்சியடையலாம்.

பாம்பின் பெயரைக் கேட்டாலே பலரும் பயந்து ஓடுகிறார்கள். பாம்பு கடித்தால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் உயிரிழக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், ஒரு பாம்பு நம் எதிரில் வந்தால், நாம் ஓடிவிடுவோம் அல்லது பாம்பை அடிக்க முயற்சிப்போம். இந்த பாம்பை உயிருடன் சாப்பிடும் விலங்கு எது என்பதற்கான விடை ஒட்டகம். பொதுவாக ஒட்டகம் இலைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடும்.

அதன் உணவில் பாம்புகள் இல்லை. ஆனால், சில சூழ்நிலைகளில் ஒட்டகங்களுக்கு பாம்புகளை உணவாக கொடுக்கின்றன. சில நேரங்களில் ஒட்டகங்கள் நோயால் பாதிக்கப்படும். அப்போது, பாம்புகளைத்தான் ஒட்டகங்களுக்கு உணவாக வழங்கப்படுகின்றன. இந்த நோய் “ஹைம்” என்று அழைக்கப்படுகிறது. இந்த நோய் காரணமாக ஒட்டகம் உணவு மற்றும் தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடும்.

மேற்கு ஆசிய நாடுகளில், ஹைம் நோயில் பாம்புகளை சாப்பிட்டால் ஒட்டகங்கள் குணமாகும் என்று நம்பப்படுகிறது. ஹைம் நோயால் பாதிக்கப்பட்ட ஒட்டகத்திற்கு அதன் வாயைத் திறந்து பாம்பை அதன் வாயில் திணித்து உணவளிக்கப்படுகிறது. அதன்பிறகு, ஒட்டகத்தின் வாயில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. பாம்பை உண்பதால் அதன் விஷம் ஒட்டகத்தின் உடலில் பரவி நோயின் பாதிப்பில் இருந்து ஒட்டகத்தை குணப்படுத்துகிறது. பாம்பு விஷத்தின் தாக்கம் நீங்கிய பிறகு, ஒட்டகம் மீண்டும் முற்றிலும் ஆரோக்கியமாகிறது.

Read More : மகாராஷ்டிராவில் பாஜகவின் மாபெரும் வெற்றிக்கு இந்த 5 விஷயங்கள் தான் காரணம்..!! அதில் ஒருநாளும் தவறியதே இல்லை..!!

English Summary

Eating a snake causes its venom to spread throughout the camel’s body, curing the camel of the disease.

Chella

Next Post

”ஐ ஆம் சாரி ஐய்யப்பா”..!! ”பயம் காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா”..!! சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் இசைவாணி..!!

Sat Nov 23 , 2024
He has been embroiled in controversy for singing a musical song that offended the sentiments of Lord Ayyappa devotees.

You May Like