fbpx

இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்..!! இவர்கள் யாரும் தொகுதியில் இருக்கக் கூடாது..!! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் அலுவலர் சிவக்குமார், ”வாக்காளர்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் வாக்களிக்க, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 4 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உரிய ஆதாரங்கள் இருந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். தேர்தல் விதிமீறல் தொடர்பாக 688 வழக்குகளில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 547 வழக்குகள் மதுவிலக்கு தடுப்பு பிரிவில் பதியப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 64 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

238 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு, 1,430 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபடவுள்ளது. வாக்குச் சாவடியில் ஆயிரத்து 206 தேர்தல் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்கிடையே, ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை 5 மணிக்கு பிறகு தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ நடத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் தொடர்பான விவகாரத்தை தொலைக்காட்சி, ரேடியோ, வாட்ஸ் ஆப், முகநூல், ட்விட்டர் போன்ற ஊடகங்கள் வாயிலாக பரப்பக்கூடாது என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் பணிகளுக்காக அழைத்து வரப்பட்ட கட்சி நிர்வாகிகள், அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

அரசு அலுவலகங்களுக்கு ஆப்பு.. மின் கட்டணம் செலுத்தவில்லை எனில்.. மின் இணைப்பு துண்டிக்கப்படும்..

Sat Feb 25 , 2023
மின் கட்டணம் செலுத்தாத அரசு துறைகளின் மின் இணைப்பை துண்டிக்க தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். சென்னையில் கடந்த 15-ம் தேதி, மின் வாரியத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.. மின்வாரிய அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் மின்வாரிய செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.. மேலும், அத்தியாவசிய சேவை வழங்கும் அரசு துறை தவிர மின்சார கட்டணத்தில் நிலுவை வைத்திருக்கும் இதர அரசு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மின் இணைப்பை […]

You May Like