fbpx

திருமண வாழ்வில் மனைவியிடம் உடல் சுகம் பெறுவதற்கு கணவன் இப்படி செய்யலாமா..? ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

திருமண வாழ்வில் மனைவியிடம் உடல் சுகம் பெறுவதற்காக, அவரை வலுக்கட்டாயமாக விருப்பத்துக்கு மாறாக வக்கிர செயல்களில் கணவர் ஈடுபட தூண்டினால், சம்பந்தப்பட்ட பெண்கள் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ய உரிமை உள்ளது என்று கேரள உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.

கணவன்-மனைவி இடையே தாம்பத்திய உறவில் எழும் பிரச்சனைகள் பல நேரங்களில் சண்டையிலும், விவகாரத்திலும் முடிகிறது. கணவன் அல்லது மனைவி தாம்பத்திய உறவை விரும்பாத சூழலில், அது பின்னாளில் சிக்கலை ஏற்படுத்துகிறது. அதேநேரம் தாம்பத்தியத்தில் கணவன்களின் அதீத ஈடுபாடும், வக்கிரமான எண்ணங்களும் மனைவிக்கு தாம்பத்தியம் மீதான வெறுப்பை ஏற்படுத்துகிறது. இந்த வெறுப்பு தான் பின்னாளில் அவர்கள் பிரியவும் காரணமாக இருக்கிறது. அப்படியான ஒரு வழக்கு தான் கேரளாவில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் பெண் கேட்டபடி டைவர்ஸ் வழக்கி உள்ளது கேரள உயர்நீதிமன்றம்..

கேரள மாநிலம் எர்ணாகுளம் நகரை சேர்ந்த 24 வயதாகும் இளம்பெண், விவாகரத்து கேட்டு எர்ணாகுளம் மாவட்ட குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், “என்னுடைய கணவர் தாம்பத்தியத்தின் போது வக்கிர எண்ணத்தில் ஈடுபடுமாறு தூண்டிவிடுகிறார். ஆபாச படங்களை பார்க்குமாறு கட்டாயப்படுத்துகிறார். பின்னர் உல்லாசத்துக்கு வற்புறுத்துகிறார். என்னுடைய விருப்பத்துக்கு மாறாக கணவர் தாம்பத்திய விவகாரத்தில் செயல்படுகிறார். எனவே, எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், விவாகரத்து பெறுவதற்கான காரணம் ஏற்புடையது அல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக இளம்பெண் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பாலியல் வக்கிரம் விவகாரத்தில் தனிப்பட்ட நபர்களின் கருத்துகள் மாறுபடும். வயது வந்தோர் தங்கள் சுதந்திரம் மற்றும் சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் செயல்களில் ஈடுபட்டால், அது அவர்களின் விருப்பம். அந்த விஷயத்தில் நீதிமன்றங்கள் தலையிடாது. மனைவியின் விருப்பத்துக்கும் மாறாக பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினால், அது உடல் மற்றும் மன ரீதியான கொடுமையாகவே அமையும்.

திருமண வாழ்வில் மனைவியிடம் இருந்து உடல் சுகம் பெறுவதற்காக, அவரை வலுக்கட்டாயமாக விருப்பத்துக்கு மாறாக வக்கிர செயல்களில் கணவர் ஈடுபட தூண்டினால், சம்பந்தப்பட்ட பெண்கள் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ய உரிமை உள்ளது. மனுதாரரின் கணவர் தனது இச்சைக்கு இணங்க மறுத்த மனைவியை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மையை ஏற்றுக்கொண்டு விவாகரத்து வழங்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.

Chella

Next Post

திமுக கூட்டணியில் பாமக, மநீம..? கடுப்பில் வெளியேறும் காங்கிரஸ், விசிக..!! தொகுதிகளுடன் காத்திருக்கும் அதிமுக..!!

Thu Jan 4 , 2024
திமுக கூட்டணியில் பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இணையும் நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாறும் நிலைமை உருவாகும் என கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக, தவாக ஆகியவை இடம் பெற்றுள்ளன. தொடக்கத்தில் 2019 தேர்தல் தொகுதி பங்கீடு பார்முலாவை அப்படியே கடைபிடிக்கலாம் என திமுக தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டதாம். தேவைப்பட்டால் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் […]

You May Like