fbpx

பூனைகள் குறுக்கே சென்றால், போன காரியம் நிறைவேறாதா..! அபசகுணம் ஏற்படுமா.? உண்மை என்ன.?

பூனைகள் மக்களின் செல்லப் பிராணிகளில் ஒன்று. பெரும்பாலான வீடுகளில் மக்கள் பூனைகளை குழந்தைகள் போல் கொஞ்சி வளர்த்து வருவதையும் நாம் பார்த்திருப்போம். ஆனாலும் பூனைகள் தொடர்பான சில மூடநம்பிக்கைகளும் மக்களிடம் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக பூனைகள் குறுக்கே சென்றால் போன காரியம் நிறைவேறாது என்று நம்புவது மற்றும் கருப்பு பூனையை பார்த்தால் அபசகுனமாக கருதுவது போன்றவை இன்றும் மக்களிடம் காணப்படுகிறது.

இவையெல்லாம் நிரூபிக்கப்படாத மூடநம்பிக்கைகளாகவே இருந்து வருகிறது. எனினும் பூனைகள் தொடர்பான இந்த மூடநம்பிக்கைகள் மக்களிடம் பரவுவதற்கு அடிப்படை காரணமாக ஒரு சில வரலாற்று காரணங்கள் இருந்திருக்கிறது. இவற்றினால் தான் இந்த மூடநம்பிக்கைகள் தொன்று தொட்டு பரவி வந்திருக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு பிளேக் என்னும் ஆட்கொல்லி நோய் எலிகளின் மூலமாக பரவி பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்தது. பூனைகள் அதிகம் சாப்பிடும் உணவாக எலி இருந்தது. எனவே பூனைகள் மூலமாகவும் மனிதர்களுக்கு பிளேக் நோய் பரவும் என்ற அபாயம் மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் மக்கள் பூனைகளை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்தனர்.

மேலும் பூனைகள் செல்லும் இடங்களை தவிர்க்க தொடங்கினர். இது நாளடைவில் பூனைகளுக்கு எதிரான மூடநம்பிக்கையாக மாரி இன்று வரை கடைபிடிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அறிவியல் ரீதியாக பூனைகளால் எந்தவிதமான அபாசகுணமும் ஏற்பட்டதாக நிரூபிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Kathir

Next Post

100 ரூபாய் பதிவு கட்டணம்...! கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்...!

Sun Nov 19 , 2023
2023-2024 ஆம் ஆண்டு 23 வது அஞ்சல் வழி மற்றும் பகுதிநேர (மாறுதலுக்கு உட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக சென்னை மாவட்டத்தில் செயல்படும் சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், 2023-2024 ஆம் ஆண்டு 23 வது அஞ்சல் வழி / பகுதிநேர (மாற்றத்திற்குட்பட்டது) கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (புதிய பாடத்திட்டத்தின்படி) விரைவில் துவங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.tncuicm.comஎன்ற இணையதள […]

You May Like