fbpx

கோமியம் குடிச்சா காய்ச்சல் குணமாகுமா..? – சென்னை IIT இயக்குனருக்கு இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை..!!

கோமியம் குடித்தால் காய்ச்சல் குணமாகும் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது சர்ச்சையான நிலையில் அவ்வாறு பசுவின் கோமியத்தை குடிப்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள கோ சம்ரக்ஷணா கோசாலையில் மாட்டுப் பொங்கலுக்கு கோ பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி பங்கேற்றார். அந்த நிகழ்வில் அவர் பேசுகையில், எனது அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தது. ஒரு சந்நியாசி வந்தார். அவரிடம் மருத்துவரை கூப்பிடலாமா என்று கேட்டார். அந்த சந்நியாசி மாட்டின் கோமியத்தை குடிக்க சொன்னார். உடனே கோமியத்தை எடுத்து வந்து அப்பா குடித்தார். 15 நிமிடத்தில் அவருக்கு ஜீரம் போய்விட்டதாம்.

பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல் பாதிப்புகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. இந்த மருத்துவ குணம் கொண்ட கோமியத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் பேசியுள்ளார். அறிவியல் பூர்வமாக கோமியம் குடிப்பதற்கு உகந்தது இல்லை எனக் கூறப்படும் நிலையிலும், கோமியம் காய்ச்சலை போக்கும் என்ற சர்ச்சையான கருத்துக்களை சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடு கூறியது, விவாத பொருளாக மாறியது.

இந்த நிலையில், மனிதர்கள் குடிப்பதற்கு கோமியம் பாதுகாப்பானது அல்ல. கோமியம் குடிப்பது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியது என இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மனிதர்கள் குடிப்பதற்கு கோமியம் பாதுகாப்பானது அல்ல; மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பாக்டீரியா கோமியத்தில் உள்ளது. பசுக்கள், எருமைகளின் சிறுநீர் மாதிரிகளை இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வில் தீங்கு விளைவிக்கக் கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read more ; சாம்பியன்ஸ் டிராபி அணியில் இருந்து சிராஜ் நீக்கப்பட்டது ஏன்..? – ரோஹித் சர்மா விளக்கம்

English Summary

Can drinking gomium cure fever..? – Indian Institute of Veterinary Research warns director of IIT Chennai.

Next Post

மன அழுத்தத்தை பிரதிபலிக்கும் ஸ்மார்ட் சாதனம்..!! - இந்திய விஞ்ஞானிகள் அசத்தல்

Sun Jan 19 , 2025
Indian scientists develop wearable device that mimics pain to detect stress

You May Like