நம்முடைய அன்றாட சமையலில் நாள்தோறும் பயன்படுத்தப்படும் ஒரு சிறிய அளவிலான பொருட்கள் தான் பூண்டும், கருவேப்பிலையும் ஆனால், இந்த பூண்டையும், கருவேப்பிலையையும் நாம் பெரிதாகவே எடுத்துக் கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால், சாப்பிடும் போது கருவேப்பிலையோ அல்லது பூண்டோ நமக்கு தட்டுப்பட்டால், நிச்சயம் அதனை தூக்கி எறிந்து விட்டு, சாப்பாட்டை மட்டும் சாப்பிடுவதை இன்றும் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ஆனால், இந்த கருவேப்பிலையும், பூண்டும் மகத்தான நன்மைகளை தன்னகத்தில் கொண்டுள்ளன. அந்த நன்மைகள் என்னென்ன? என்பது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
பூண்டை பொருத்தவரையில், அது நமக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் இந்த பூண்டை ஒரு பொருளில் சேர்த்து செய்தால், நிச்சயமாக அந்த பொருள் கேட்டு போவதற்கான வாய்ப்பே இல்லை நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் தன்மையை கொண்டிருக்கும். அதேபோல நீரிழிவு நோய்க்கு இந்த பூண்டு மிகப்பெரிய சிம்மசொப்பனமாக இருக்கும். ஆகவே நீரிழிவு நோயாளிகள் இந்த பூண்டை விரும்பி சாப்பிட்டால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும்.
மேலும் இந்த கருவேப்பிலை மற்றும் பூண்டில் இருக்கக்கூடிய நன்மைகள் என்னென்னவென்றால், உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து, உடல் எடையை வெகுவாக கட்டுக்குள் வைப்பதற்கு இந்த பூண்டும், கருவேப்பிலையும் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, நீரிழிவு நோயையும், கருவேப்பிலையும், பூண்டும் காட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இந்தப் பூண்டில் இருக்கின்ற சல்பர்கள் மற்றும் கருவேப்பிலையில் இருக்கின்ற பொட்டாசியம் கலவை போன்றவை, இரத்த அழுத்தத்தை குறைக்க உதவியாக உள்ளது. அதோடு செரிமான மண்டலங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் இது உதவி புரிகிறது. பூண்டு மற்றும் கறிவேப்பிலையை வெறும் வயிற்றில், சாப்பிட்டு, வெந்நீரை குடித்தால், அது நம்முடைய உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.
நாம் இப்படி செய்வதால், உடலில் இருக்கின்ற நச்சுக்கள் வெளியேறி, உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு, நோய் எதிர்ப்பு மண்டலமும் வலிமையாக இருக்கும். மேலும், உடலில் கெட்ட கொழுப்புகளை குறைத்து, நல்ல கொழுப்புகளை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.