வீட்டுக் கடன் வாங்குவோருக்கு தனிநபர் கடனும் கிடைக்குமா? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளுக்காக கடன் வாங்குகிறார்கள். குறிப்பாக வீடு கட்டுவதற்கும், கார் வாங்குவதற்கும், திருமண நிகழ்ச்சிகளுக்கும், தொழில் தொடங்குவதற்கும் உள்ளிட்ட பல்வேறு வகையான காரணங்களுக்காக கடன் வாங்குகிறார்கள். இதில், குறிப்பாக பெரும்பாலான மக்கள் கடன் வாங்குவதற்கு வங்கிகளையே நாடுகின்றனர். இந்நிலையில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு தனிநபர் கடனும் கிடைக்குமா? என்ற சந்தேகம் பலரது மத்தியிலும் எழுந்துள்ளது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
வீட்டுக்கு கடன் வாங்கி இருந்தால் இஎம்ஐ அதிகமாக கட்ட வேண்டியிருக்கும். அதோடு வீட்டுக்கடனை அடைப்பதற்கான கால அவகாசமும் கூடுதலாக இருக்கும். எனவே, உங்களுடைய சிபில் ஸ்கோரை பொறுத்துதான் தனி நபர் கடன் கிடைக்கும். ஒருவரால் வீட்டு கடன் மற்றும் தனிநபர் கடன் போன்றவற்றை செலுத்த முடியுமா? என்பதை வங்கி ஆராய்ந்த பிறகு தான் 2 கடன்களையும் ஒருவருக்கு வழங்கும். மேலும், ஒருவர் வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பாக முதலில் எந்த வகையில் வட்டி குறைவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதோடு செயல்பாட்டு கட்டணம், கடனை திருப்பி செலுத்தும் காலம் எவ்வளவு, வேறு ஏதேனும் சலுகைகள் இருக்கிறதா போன்றவற்றையெல்லாம் ஆராய்ந்த பிறகு தான் வங்கியில் கடன் வாங்க வேண்டும்.
Read more ; ஒரே கணவர் 9 மனைவிகள்.. அதுவும் ஒரே வீட்டில்!! யாருப்பா நீங்க எல்லாம்! வயிறு எரியும் நெட்டிசன்கள்