fbpx

இரவில் ப்ரா அணியலாமா? போருக்கு மத்தியில் இஸ்ரேலிய பெண்களுக்கு எழுந்த கவலை..!!

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் மரணத்திற்குப் பழிவாங்கப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி என்று இரவு பகலாக இஸ்ரேல் மக்கள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கிடையில், இஸ்ரேலிய பெண்களுக்கு இரவில் பிரா அணியலாமா வேண்டாமா என்ற கவலையில் எழுந்துள்ளது. இதற்கான காரணம் என்ன தெரியுமா?

இஸ்ரேலிய பெண்களின் பிரச்சனை என்ன?

ஏவுகணை அல்லது ராக்கெட் தாக்குதல் நடத்தினால், சைரன் சத்தம் கேட்டவுடன் மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் பாதுகாப்பான இடத்தை அடையவில்லை என்றால் மரணம் நிச்சயம். பொதுவாக பெண்கள் இரவில் தளர்வான ஆடைகளை அணிவார்கள்.

வெடிகுண்டுகளில் இருந்து தப்பிக்க பாதுகாப்பான இடங்களுக்கு ஓட வேண்டும். படிக்கட்டுகளில் மறைந்து கொள்ள வேண்டும். இந்த நேரத்தில், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அவர்களை எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளது. ப்ரா இல்லாமல் தளர்வான ஆடைகளை அணியும் பெண்கள் சங்கடத்தை சந்திக்க நேரிடும். மறுநாள் அவர்களுடன் பழக வேண்டிய அவசியம் இருக்கும்.

இஸ்ரேலில் இரவில் ப்ரா அணிவதா இல்லையா என்பது குறித்து சமூக ஊடகங்களில் நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன. இஸ்ரேலிய பெண்கள் இதில் ஆர்வமாக உள்ளனர். டெல் அவிவ் பெண் ஒருவர் இஸ்ரேலிய இராணுவ (IDF) செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரியின் புகைப்படத்தை வெளியிட்டு, அவர் இது குறித்து எந்த தகவலும் கூறவில்லையே. ப்ரா அணியவேண்டுமா அல்லது வேண்டாமா? என்று எழுதினார்.

Read more ; உக்ரைன் அதிரடி தாக்குதல் : ரஷ்யாவில் அவசரநிலை பிரகடனம்..!!

English Summary

Concerns have arisen about whether or not Israeli women should wear bras at night. Do you know the reason for this?

Next Post

ஷாக்..!! சென்னை சாலையில் இத்தனை பிரச்னைகள் இருக்கா? வெளியான ரிப்போர்ட்!! அதிகாரிகள் என்ன சொல்லுறாங்க?

Fri Aug 9 , 2024
சென்னையில் உள்ள சாலைகள் குறித்து அறப்போர் இயக்கம் முக்கிய ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. அதாவது தலைநகர் சென்னையில் சுமார் 200க்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற ஸ்பீட் பிரேக்கர்கள் மற்றும் பள்ளங்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் சென்னை முழுக்க 467 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டன. சுமார் 1000 தன்னார்வலர்கள் நடத்திய இந்த ஆய்வில் ஐயப்பந்தாங்கல், அகரம்தென் மற்றும் திருநீர்மலை உள்ளிட்ட சென்னை மாநகராட்சிக்கு உட்படப் பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஸ்பீட் […]

You May Like