தற்போதைய அறிவியல் மருத்துவத்தை விட, ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. ஆனால், ஆயுர்வேதத்தை பெரும்பாலும், தற்போது யாரும் விரும்புவதில்லை. இந்த ஆயுர்வேதத்தில் பல்வேறு நன்மைகள் ஒளிந்துள்ளனர். ஆனால், அதை விடுத்து அறிவியல் மருத்துவத்தில் ஈடுபட்டதால், மனிதனுக்கு புது, புது வியாதிகள் தான் வந்து சேர்ந்து விடுகின்றன.
அந்த வகையில், சீந்திலில் இருக்கின்ற சிறப்பு குணங்கள் என்னென்ன என்பது பற்றிய தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது,சீந்திலில் உள்ள சிறப்பு குணங்கள், பெண்களுக்கு வயதான தோற்றம், முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள், சுருக்கங்கள் போன்றவற்றை வெகுவாக குறைக்கிறது..
இது ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. உடலில் இருக்கின்ற செல்கள் சிதலமடைவதை தடுக்கவும், இது உதவியாக உள்ளது நோய்களை தவிர்ப்பதற்கும் உறுதுணையாக உள்ளது இந்த சீந்தில் கொடி.
சிலர் அஜீரண பிரச்சனையால் பெரும் அவதியுறுவார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு, இந்த சீந்தல் இலை சாறு வெகுவாக பலனை வழங்குகிறது. இந்த சீந்தில் பொடியை வெள்ளத்தில் சேர்த்து, சாப்பிட்டு வந்தால், அஜீரணப் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும். நீரிழிவு நோயை எதிர்க்கும் பண்புகளை கொண்ட இந்த சீந்தில் இலை இரண்டாம் நிலை நீரிழிவு நோயையும் குறைக்க உதவியாக இருக்கிறது.
அதேபோல, இருமல், டான்சில்ஸ், சளி போன்ற சுவாசம் குறித்த பிரச்சனைகள் இருந்தால், அதனையும் தவிடு பொடி ஆக்கும் தன்மை இந்த சீந்தில் கொடிக்கு உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அதேபோல, மூட்டு வலியால், அவதிப்பட்டு வருபவர்களும் கூட, இதனை பயன்படுத்தினால், இதன் மூலமாக, பல்வேறு நன்மைகள் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், இந்த சீந்தில் இலையில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறப்படுகிறது.