fbpx

முள்ளங்கி கீரை இத்தனை நோய்களை தீர்க்குமா?… மருத்துவப் பயன்கள் இதோ!

எண்ணற்ற மருத்துவ பயன்களை உள்ளடக்கியுள்ள முள்ளங்கி கீரையின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

முள்ளங்கிக் கீரைக்கு உஷ்ணத்தை மேம்படுத்தும் திறன் கொண்டுள்ளதால், நுரையீரல் தொற்று மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் முள்ளங்கியை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். மலச்சிக்கல், பசியின்மை, வயிற்றுவலி போன்ற பிரச்சனைகள் கொண்டவர்கள் முள்ளங்கிக் கீரையை அவர்கள் உணவு பட்டியலில் தாராளமாக சேர்த்துக் கொண்டு வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். அரைத்த முள்ளங்கி கீரையை வெந்தயம் ஊற வைத்துள்ள தண்ணீருடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி உடனே சரியாகும்.

முள்ளங்கிக் கீரையை சாறு எடுத்து அதனை 40 மில்லி அளவில் தினமும் குடித்து வர (சுமார் 21 நாட்கள்) சிறிய அளவிலான சிறுநீரகக் கற்கள் கரைந்து விடும். தவிர சிறுநீர்ப்பை வீக்கத்தையும் குணப்படுத்தும். முள்ளங்கிக் கீரையுடன் சிறிது பார்லி சேர்த்து வேக வைத்து சாப்பிட நீர்க்கட்டு உடைந்து சிறுநீர் தாராளமாக போகும். முள்ளங்கிக் கீரைச் சாற்றில் பொடித்த வெல்லம் சேர்த்து அருந்தினால் கல்லீரல் நோய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும்.

முள்ளங்கிக் கீரை சாறில் மிளகை சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து பின் மிளகினை பொடித்து அதனை அதிகாலையில் 2 சிட்டிகை எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட நன்றாக பசி எடுக்கும். முள்ளங்கிக் கீரை சாறுடன் ஊறவைத்த பாதாம் பருப்பை சேர்த்து அரைத்துச் சாப்பி ஆண்மை சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.முள்ளங்கிக்கீரைச் சாற்றில் நெருஞ்சில் முள்ளை ஊறவைத்து, உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை மாலை இருவேளையும் 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். முள்ளங்கி கீரை சாறில் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடித்து விட்டு வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து காலை மாலை என தினமும் இருவேளை சாப்பிட்தி வர சர்க்கரை நோயினை கட்டுக்குள் வைக்கும்.

Kokila

Next Post

தொடரும் வழக்கறிஞர்கள் கொலை சம்பவம்....! சட்ட பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்....! அண்ணாமலை கோரிக்கை...!

Mon Mar 27 , 2023
சென்னை பெருங்குடியில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சட்ட பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில; சென்னை பெருங்குடியில், வழக்கறிஞர் ஜெய்கணேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி வழக்கறிஞர் முத்துக்குமார், அரியலூர் வழக்கறிஞர் சாமிநாதன், தர்மபுரி வழக்கறிஞர் சிவக்குமார் என தொடர்ந்து […]
’பொங்கலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து வேட்டி, சேலைகளை வாங்க தமிழக அரசு முயற்சி’..! - அண்ணாமலை

You May Like