fbpx

வீட்டில் விளக்கேற்றுவதால் இவ்வளவு நல்ல விஷயங்கள் நடக்குமா..? சரியான நேரம் எது..?

தீபம் ஏற்றுவது வேள்வி செய்வதற்கு சமமாகும். நீங்கள் ஏற்றும் தீபத்தில் உள்ள எண்ணெய் தெய்வத்துக்கு அவிர் பாகமாகப் போய்ச் சேரும். இரண்டு வேளையும் இல்லத்தில் விளக்கேற்ற வேண்டும். வீடுகளில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை (பிரம்ம முகூர்த்தம்), மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை (தினப்பிரதோஷம்) காலங்களில் விளக்கேற்றுவதால், மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

வீட்டில் விளக்கு ஏற்றுவதால், நமது கர்ம வினைகள் நீங்கும். தெய்வத்தின் அருள் எளிதில் கிடைக்கும். வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கும். ஒரு முக விளக்கேற்றினால் நினைத்த செயல்களில் வெற்றி உண்டாகும். துன்பங்கள் நீங்கும். நன்மதிப்பு உண்டாகும். இரண்டு முகம் உள்ள விளக்கை ஏற்றினால், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்.

மூன்று முகம் ஏற்றினால், புத்திர தோஷம் நீங்கும். நான்கு முகம் ஏற்றினால், அனைத்து பீடைகளும் நீங்கும். அனைத்து செல்வங்களும் கிடைக்கும். ஐந்து முகம் ஏற்றினால், எல்லா நன்மைகளும் கிடைக்கும். அஷ்ட ஐஸ்வரியங்களும் உண்டாகும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். திருமணத்தடை நீங்கும். புண்ணியம் பெருகும்.

Read More : ஜாயிண்ட் பேங்க் அக்கவுண்ட் + உயில் + இன்சூரன்ஸ்..!! இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

English Summary

By lighting a lamp in the house, our karmic reactions are removed. God’s grace is easily available. All obstacles in life will be removed.

Chella

Next Post

மக்களே...! இன்று முதல் அமலுக்கு 4 முக்கிய மாற்றங்கள்...! முழு விவரம்

Thu Aug 1 , 2024
4 major changes effective from today

You May Like