fbpx

பெற்றோர்கள் பிரிந்து வாழ்ந்தால் குழந்தை தந்தையிடம் வளரலாமா? சட்டத்தின் விளக்கம்..

குழந்தையை மீட்டுத் தர வேண்டும் என தாய் தொடர்ந்த வழக்கில் தந்தையிடம் குழந்தை வளர்வது சட்ட விரோதம் கிடையாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசித்ரா அமிர்தநாயகம் என்பவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இருவருக்கும் 10வயதில் மகன் இருக்கின்றான். இந்நிலையில் தம்பதி பிரிந்ததால் மகன் அவனது தந்தையோடு வசித்து வருகின்றான்.

இந்நிலையில் ஜெயசித்ரா, தன் மகனை கணவரிடம் இருந்து மீட்டு ஆஜர்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு , ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் திருவடிக்குமார் வழக்கறிஞர் ஆஜராகி , கடந்த 31ம் தேதி மனுதாரர் மகன் போலீசாரிடம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து மனுதாரரின் புகார் முடித்து வைக்கப்பட்டு உள்ளது என்றார். இது தொடர்பாக ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மனுதாரரின் 10வயது மகன் அவரது தந்தையின் கட்டுப்பாட்டில் உள்ளார். தந்தையின் கட்டுப்பாட்டில் குழந்தை இருப்பதை சட்டவிரோதமாக கருத முடியாது. எனவே இந்த வழக்கில் இந்த நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. மனு தாரர் தனது மகனை சந்திக்க விரும்பினால் , சம்மந்தப்பட்ட கீழ்க்கோர்ட்டில் முறையிடலாம் என அந்த ஆட்கொணர்வு வழக்கை நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.

மைனாரிட்டி மற்றும் பாதுகாவலர் சட்டம் 1956ன் கீழ் 5 வயது வரை உள்ள ஆண், பெண் குழந்தைகளுக்கு தாய் மட்டுமே நேரடி இயற்கையான பாதுகாவலர் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பெற்றோர்கள் பிரிந்தால் , இரண்டு பேரில் பெற்றோர் யாரிடம் வேண்டுமானாலும் குழந்தை வளரலாம் . இது சட்டவிரோதமானது கிடையாது என சட்டம் கூறுகின்றது.

Next Post

பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கியவாறு பயணம் செய்தால்; பெற்றோர் மற்றும் ஆசிரியர் மீது நடவடிக்கை... எஸ்.பி. எச்சரிக்கை..

Sun Sep 25 , 2022
விழுப்புரம், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு சென்றால், மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க போவதாக எஸ்.பி ஸ்ரீநாதா எச்சரித்துள்ளார். பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்தால் மாணவர்களை மட்டுமல்லாமல், அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா எச்சரிக்கை செய்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;- இந்த ஆபத்தான […]

You May Like