fbpx

100 ரூபாய்க்கு Petrol போடலாமா, இல்ல 120 ரூபாய்க்கு போடலாமா? எது பெஸ்ட்?  இந்த ட்ரிக்கை தெரிஞ்சிவச்சிக்கோங்க!

பெட்ரோல் பங்க்குகளில் பெரும்பாலானோர் ரூ. 100, ரூ. 200 என்ற தொகைக்கு பெட்ரோல் போடுவார்கள். சிலர் லிட்டர் கணக்கில் பெட்ரோலை தங்களது வானங்களுக்கு ஏற்றிக் கொள்வார்கள். ஒரு சிலர் ரூ.100க்கு பதிலாக ரூ. 110, ரூ.120 என்ற தொகைக்கு பெட்ரோல் போடுவார்கள். இத்தகைய முறைகளால் பலன்கள் கிடைக்குமா? என்பது குறித்து பார்க்கலாம்.

கார், பைக் என எதுவாக இருந்தாலும், வாகனங்களில் பெட்ரோல், டீசல் நிரப்பும்போது, ​​ரூ.100க்கு பதிலாக 110 அல்லது 120 என்ற அளவில் பொதுமக்கள் சிலர் எரிபொருளை எடுத்துக்கொள்வார்கள். இதன் மூலம் எரிபொருள் திருடப்படுவது தடுக்கப்படுவதாகவும், சரியான அளவில் எரிபொருள் கிடைப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.  100க்கு பதிலாக 120 ரூபாய்க்கு எரிபொருள் நிரப்பினால் சரியான அளவு கிடைக்குமா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.

இதற்கு ரயில்வே முன்னாள் தலைமை பொறியாளர் அனிமேஷ் குமார் சின்ஹா ​​அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, “ரூ. 100, 200, 300க்கு அதிக எண்ணிக்கையில் பெட்ரோல் போடுகிறார்கள் என்றால், ஊழியரின் வசதிக்காக அந்த தொகை குறியீட்டில் வைக்கப்பட்டிருக்கும். இது அவரது வேலையை எளிதாக்குகிறது. இதன் மூலம் அவர் அதிக முறை பட்டன்களை அழுத்த தேவையில்லை.

ஆனால், 120, 130 என வாடிக்கையாளர் கேட்கும்போது அந்த தொகையை மாற்ற ஊழியர் பட்டன்களை அமுக்க வேண்டும். ரூ. 100, ரூ. 200க்கு பெட்ரோல் வாங்கும்போது சாஃப்ட்வேர் மூலம் அந்த தொகைக்கான எரிபொருள் மாற்றப்படுகிறது. அந்த வகையில் ரூ. 110, ரூ. 120க்கு எரிபொருள் நிரப்பினால்தான் அளவு சரியாக இருக்கும் என்பதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை” என்றார்.

Read more ; கள்ளச்சாராயம், மாஞ்சோலை விவகாரம்..!! சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

English Summary

Be it a car or a bike, while filling petrol or diesel in vehicles, some people will charge Rs 110 or 120 instead of Rs 100. They believe that this will prevent fuel theft and ensure adequate fuel availability.

Next Post

கள்ளச்சாராய மரணம் எதிரொலி..!! அனைத்து மாவட்டங்களுக்கும் பறந்த உத்தரவு..!! முக்கிய புள்ளிகள் சிக்க வாய்ப்பு..!!

Thu Jun 20 , 2024
As 36 people have died due to drinking liquor in Karunapuram of Kallakurichi district, an action order has been sent to all district police SPs in Tamil Nadu.

You May Like