fbpx

’இப்படியெல்லாம் பேசலாமா’..? பாஜக வேட்பாளர் பிரச்சாரம் செய்ய தடை..!! தேர்தல் ஆணையம் அதிரடி..!!

மேற்குவங்க மாநிலம் தம்லுக் தொகுதி பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய், முதல்வர் மம்தா குறித்து தரக்குறைவாக பேசியிருந்தார். இதற்காக அபிஜித் 24 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

BJP | மேற்குவங்க முன்னாள் நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய், தம்லுக் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவர் மே 15ஆம் தேதி ஹால்டியா மாவட்டத்தில் நடந்த பிரசாரத்தின்போது, முதல்வர் மம்தா பானர்ஜியை தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சனம் செய்தார். இது குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக மே 20ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க அபிஜித்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், இன்று (மே 21) மாலை 5 மணி முதல் 24 மணிநேரத்திற்கு தம்லுக் தொகுதி பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய், பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், அவர் இதுபோன்ற பேசுகையில் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரித்தது. அபிஜித் போட்டியிடும் தம்லுக் தொகுதியில் மே 25ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : அஜித் முதலில் காதலித்த நடிகை யார் தெரியுமா..? ஷாலினியுடன் செட் ஆனது எப்படி..?

Chella

Next Post

BSE-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மதிப்பு முதல்முறையாக 5 டிரில்லியனை எட்டியது..!

Tue May 21 , 2024
அனைத்து BSE-பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் முதல் முறையாக $5 டிரில்லியன்களை எட்டியது, இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்து $633 பில்லியனுக்கும் அதிகமான உயர்வைக் காட்டுகிறது. BSE இல் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் முதல் முறையாக $5 டிரில்லியனைத் தாண்டியுள்ளது. மே 21 அன்று ஒரு புதிய உச்சத்தை எட்டியது. BSE வலைத்தளத்தின் தரவு, இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து எழுச்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அனைத்து BSE-பட்டியலிடப்பட்ட […]

You May Like