fbpx

’என் பொண்டாட்டி கூட நீ அப்படி பண்ணலாமா’..? வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்..!! பகீர் சம்பவம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி (36). இவர் சிவகாசியில் உள்ள சாம்பிராணி தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அப்போது, கம்பெனி முன்பு சுந்தரபாண்டி நின்று கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது. பின்னர், சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் சாமுவேல், கண்ணன், சுருட்டை குமார், வீரபுத்திரன், குட்டை ஆனந்த் ஆகிய 5 பேரும் சேர்ந்து சுந்தரபாண்டியை கொலை செய்தது தெரியவந்தது. இதில் வீரபுத்திரனை சிவகாசி கிழக்குப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. எங்களது நண்பர் சந்திரன் என்பவரின் மனைவிக்கும், சுந்தரபாண்டிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதுகுறித்து சந்திரன் எங்களிடம் கூறி வருத்தப்பட்டார்.

இதனையடுத்து, நானும், சாமுவேல், கண்ணன், குட்டை ஆனந்த், சுருட்டைக்குமார் ஆகியோர் சேர்ந்து கள்ளக்காதலை கைவிடுமாறு சுந்தரபாண்டியனிடம் கூறினோம். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்ததால் கொலை செய்தோம் என கூறியுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Chella

Next Post

TATA நிறுவனத்தில் வேலை வாய்ப்பு...! மாதம் ரூ.17,000 ஊதியம் வழங்கப்படும்...! உடனே விண்ணப்பிக்கவும் ...

Wed Apr 5 , 2023
டாடா ஸ்டீல் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Associate Engineer – I பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் B.E, Diploma […]

You May Like