fbpx

நவராத்திரி விரதம் கடைபிடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..? எப்போது தொடங்குகிறது..?

நம் நாட்டில் நவராத்திரி விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது. ஒரு வருடத்தில் 4 நவராத்திரிகள் வருகின்றன. அவை சைத்ர நவராத்திரி, ஷரதிய நவராத்திரி, இரண்டு குப்த நவராத்திரி ஆகும். நவராத்திரியின் போது 9 நாட்கள் துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுகின்றன.

இந்து நாட்காட்டியின்படி, ஷரதிய நவராத்திரி இந்தாண்டு அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி அக்.24ஆம் தேதி முடிவடைகிறது. மத நம்பிக்கைகளின்படி, ஷரதிய நவராத்திரியின் போது துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வழிபடுவது நல்லது. இந்த ஒன்பது நாட்களும் துர்கா தேவியை வழிப்பாடு செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி பெரும்பாலும் செப்டம்பர் – நவம்பர் மாதங்களில் வருகிறது. இது இலையுதிர்காலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு மாறும் நேரம். இந்த நேரத்தில் பூமியின் வடக்கு கோளம் சூரியனை விட்டு விலகியிருக்கும். இதனால் பகல் குறைவாகவும் இரவு அதிகமாகவும் காணப்படும். சூரிய ஒளி பூமியில் படும் நேரம் குறையும். மேலும், குளிரால் மனித உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு நோய்கள் வர வழி வகுக்கும். அதில் இருந்து தற்காத்துக்கொள்ள ஒரு பயிற்சியாகவே இந்த நவராத்திரி விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

புராணக்கதை

இந்து புராணங்கள் படி, அரக்கர்கள் அரசன் மகிஷாசூரன் மூன்று லோகங்கலான பூமி, சொர்க்கம் மற்றும் நரகத்தை தாக்கி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நேரத்தில், அவனை வதம் செய்ய சக்தி தேவைப்பட்டது. இதற்கான காரணம், படைக்கும் கடவுளான பிரம்மா ஒரு பெண்ணால் மட்டுமே மகிஷாசுரனை வீழ்த்த முடியும் என்ற வரம் அளித்துள்ளார்.

எனவே பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் தங்கள் சக்திகளை ஒன்றிணைத்து, அரக்கர்களின் அரசனான மகிஷாசுரனை வதம் செய்ய துர்கா தேவியை அதாவது, பராசக்தியை உருவாக்கினார்கள். 15 நாட்கள் போருக்குப் பிறகு, பராசக்தி அவனை மாளைய அமாவாசை அன்று திரிசூலத்தால் வதம் செய்தார். அதற்குப் பிறகான 9 நாட்களுக்கு, பராசக்தியை 9 வெவ்வேறு வடிவங்களில், அவதாரங்களில் வழிபடத்துவங்கினர்.

விரதம்

இந்த ஒன்பது நாட்களும் மக்கள் இடைவிடாத விரதம் இருக்கிறார்கள். காலையில் இருந்து விரதம் இருப்பதால் உடலில் உள்ள கூடுதல் கொழுப்புகள் கரைய வழி செய்கிறது. இன்றைய காலகட்டத்தில் கூடுதல் கொழுப்பு உடலில் இருப்பதால் தான் நோய்கள் வருகின்றன. அவை இந்த குளிர் காலத்தில் பெரிதளவில் கரைய வாய்ப்புள்ளது. உடல் எடை குறைக்க போராடுபவர்கள் இந்த 9 நாள் விரதத்தை நிச்சயம் எடை குறைப்பிற்கு பயன்படுத்தலாம்.

இந்தாண்டு நவராத்திரி எப்போது வருகிறது…?

ஜோதிடத்தின்படி, சித்ரா நட்சத்திரம் அக்.14ஆம் தேதி மாலை 4.24 மணிக்கு தொடங்கி அக்.15ஆம் தேதி மாலை 6.13 வரை இருக்கும். மறுபுறம், அபிஜீத் முஹூர்த்தம் அக்.15ஆம் தேதி காலை 11.04 முதல் 11.50 வரை இருக்கும். அதனால், இந்தாண்டு ஷரதியா நவராத்திரி அக்.15ஆம் தேதி முதல் அக்.24ஆம் தேதி வரை இருக்கும்.

துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள்

1. அக்டோபர் 15ஆம் தேதி மா ஷைலபுத்ரி வழிபாடும்,

2. அக்டோபர் 16ஆம் தேதி பிரம்மச்சாரிணி வழிபாடும்,

3. அக்டோபர் 17ஆம் தேதி மா சந்திரகாண்டா வழிபாடும்,

4. அக்டோபர் 18ஆம் தேதி மா கூஷ்மாண்டா வழிபாடும்,

5. அக்டோபர் 19ஆம் தேதி மா ஸ்கந்தமாதா வழிபாடும் நடைபெறும்.

6. அக்டோபர் 20ஆம் தேதி காத்யாயனி வழிபாடும்,

7. அக்டோபர் 21ஆம் தேதி மா காலராத்திரி வழிபாடும்,

8. அக்டோபர் 22ஆம் தேதி மா சித்திதாத்திரி வழிபாடும்,

9. அக்டோபர் 23ஆம் தேதி மகாகௌரி வழிபாடும்,

10. அக்டோபர் 24ஆம் தேதி விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது.

Chella

Next Post

அடக்கடவுளே, ஒரு வக்கீலுக்கே இந்த நிலைமையா....? கட்டாய பாலியல் வண்புணர்வு, நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை.....!

Thu Sep 28 , 2023
ஒரு வழக்கறிஞரை, ஒரு கிரிமினல் குற்றவாளியுடன் பாலியல் உறவில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்திய காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்றம் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதோடு, அவர்கள் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட ஆறு காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சண்டிகரில் சென்ற 14ஆம் தேதி ஒரு வழக்கறிஞர் […]

You May Like