fbpx

கல்யாண வீடியோவை வித்து பணம் சம்பாதிக்கனுமா? நயன்தாரா-தனுஷ் விவகாரம் குறித்து மேடையில் விளாசிய காயத்ரி ரகுராம்..!!

இயக்குநர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா இருவரும் காதலித்து கடந்த 2022 ஜூன் 9ஆம் தேதி கரம் பிடித்தனர். இவர்களது திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது. இத்திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. மேலும் அதை இயக்கும் பணிகளை கெளதம் மேனன் மேற்கொண்டார். இதனால் பல்வேறு கட்டுபாடுகளுடன் இத்திருமணம் நடந்தது. 

இத்திருமணம் ‘நயன்தாரா; பியாண்ட் தி ஃபேரி டேல்’(Nayanthara: Beyond The Fairy Tale)என்ற பெயரில் நீண்ட காலமாக உருவாகி வந்தது. இதில் நயன்தாராவின் திருமணம் அல்லாது அவரது வாழ்க்கை பயணத்தையும் விவரிப்பதாகவும் இருக்கும் என நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும் வருகிற 18ஆம் தேதி நயன்தாராவின் பிறந்தாளன்று வெளியாகும் என தெரிவித்திருந்தது. இதையொட்டி படத்தின் ப்ரொமோவை தொடர்ச்சியாக அடுத்தடுத்து சமீபத்தில் வெளியிட்டு வந்தனர். அதில் ஒரு ப்ரொமோவில் நானும் ரௌடி தான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளும், பாடல்களும் மூன்று விநாடி இடம்பெற்றிருந்தது. 

இதையடுத்து நானும் ரௌடி தான் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் படத்தின் பாடலையும், காட்சியையும் தன்னிடம் அனுமதி கேட்காமல் வீடியோவில் பயன்படுத்தியதாகக் கூறி 3 விநாடிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் விஸ்பரூபம் எடுத்ததை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பேசு பொருளானது..

இந்த நிலையில், நயன்தாரா – தனுஷ் விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் அதிமுக மேடையில் பேசி இருக்கிறார். மதுரையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பேசிய காயத்ரி ரகுராம், இன்று நயன் தாரா – தனுஷ் சண்டையை பெரிய செய்தியாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் நமக்கு எது முக்கியம். நயன்தாரா நடிச்சு சம்பாதித்தால் என்ன? இல்லை கல்யாண வீடியோவை வித்து சம்பாதித்தால் என்ன? அவர் தனுஷோடு சண்டைப்போட்டால் என்ன? போடாவிட்டால் என்ன? ஆனால், போதைப்பொருள் ஒரு சாக்லேட் போல எல்லா குழந்தைகள் கையிலும் இன்று சென்று இருக்கிறது. பள்ளி வாசலில் போதைப்பொருள் சகஜமாக கிடைக்கிறது. தமிழ்நாடு இன்று அந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.” என்று பேசினார்.

Read more ; பிக்பாஸ் எலிமினேஷன்… மீண்டும் ஒரு பெண் போட்டியாளருக்கு டாட்டா காட்டும் பிக்பாஸ்..!! அப்போ சாச்சனா?

English Summary

Can you make money by seeding a wedding video? Gayatri Raghuram blasted on stage about Nayanthara-Dhanush issue..!!

Next Post

வாங்கியது ரூ.20 லட்சம்.. ஆனா 2 கோடி செலுத்த நோட்டீஸ்..!! - தனியார் நிதி நிறுவனத்தில் அராஜகத்தால் ஷாக் ஆன குடும்பத்தினர்

Sun Nov 17 , 2024
Purchased Rs.20 lakhs.. but notice to pay 2 crores..!! - A family shocked by anarchy at a private financial institution

You May Like