ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பதவியிடங்களுக்கு வெளியிடப்பட்டிருந்த நேரடி பணியாளர் தேர்வு அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டி.என்.ஹெச்.பி (TNHB) Tamil Nadu Housing Board நிறுவனமானது கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதன் மூலம் 2021ஆம் ஆண்டு ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரப்பூர்வ இணைப்பையும் வழங்கியது. டி.என்.ஹெச்.பி வேலைக்கான அனைத்து வகையான அறிவிப்புகள் மற்றும் விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையிலும், புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்புகளை தெரிந்து கொள்ளும் வகையிலும் அந்த அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள 15 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பிக்க முறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேரடி பணியாளர் தேர்வு அறிவிப்பாணையை ரத்து செய்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது. நிர்வாக காரணங்களால் முந்தைய அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக வீட்டு வசதி வாரிய மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.