இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம், கடந்த மாதம் நாடு முழுவதும் உள்ள 20 மாநிலங்களில் 76 மருந்து நிறுவனங்களை ஆய்வு செய்தது.. கலப்பட மற்றும் தரமற்ற மருந்துகளின் உற்பத்தியை நிறுத்தவும், மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்தவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. போலி மருந்து நிறுவனங்களை ஒடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 15 நாட்கள் மத்திய மற்றும் மாநில குழுக்கள் சார்பில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது..
இந்த 76 மருந்து நிறுவனங்களில், 26 நிறுவனங்களுக்கு அவை தயாரிக்கும் மருந்துகளின் தரம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது மேலும், 3 நிறுவனங்களின் தயாரிப்பு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.. இந்த அதிரடி ஆய்வுக்குப் பிறகு, 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் 20 மாநிலங்களில் உள்ள 76 நிறுவனங்களில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ) ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, போலி மருந்துகளை உற்பத்தி செய்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இமாச்சலப் பிரதேசத்தில் 70 நிறுவனங்கள் மீதும், உத்தரகாண்டில் 45 நிறுவனங்கள் மீதும், மத்தியப் பிரதேசத்தில் 23 நிறுவனங்கள் மீதும் போலி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. போலி மருந்துகளை தயாரித்த பெரும்பாலான நிறுவனங்கள் உத்தரகாண்ட் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
இந்த நடவடிக்கை முதல் கட்டம் தான் என்றும், போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீதான நடவடிக்கை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல், சளி மருந்துகளை உட்கொண்ட பிறகு குழந்தைகள் இறந்ததாக உஸ்பெஸ்கிஸ்தான் அறிவித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது..