fbpx

”பழைய வருமான வரி வழக்குகள் ரத்து”..!! ”1 கோடி பேர் பயன்”..!! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து உரையாற்றிய நிர்மலா சீதாராமன், ”வருமான வரி விதிப்பு விகிதங்களில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தற்போதைய நிலையே தொடரும்” என்றும் அறிவித்தார். இது தொடர்பான அவரது அறிவிப்பில், ”பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வருமான வரி தாக்கல் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக செலுத்திய வரியை திரும்பப் பெறுவதற்கான கால அளவு 2013-ல் 94 நாட்களாக இருந்தது. தற்போது அது 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை. இறக்குமதி வரி உட்பட நேரடி மற்றும் மறைமுக வரியில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரிச் சலுகை மார்ச் 31, 2025 வரை நீட்டிக்கப்படுகிறது. பழைய வருமான வரி வழக்குகள் ரத்து செய்யப்படுகிறது. இதன்மூலம் 1 கோடி வரி செலுத்துவோர் பயன்பெறுவர்” என்றார்.

Chella

Next Post

"இந்த மாத 'OTT' ரிலீஸ் லிஸ்ட்.."! உங்க ஃபேவரிட் மூவி லிஸ்ட்ல இருக்கா.?

Thu Feb 1 , 2024
உங்களுக்கு பிடித்த ஹீரோக்களின் படங்களை, தியேட்டரில் அமர்ந்து ரசித்த நீங்கள் அதனை வீட்டில் இருந்தபடி மீண்டும் பார்க்க, ஓடிடி(OTT) தளத்தில் இந்த பிப்ரவரியில் வெளியாகும் படங்களின் பட்டியல் இதோ! ஆக்சன், காதல், காமெடி என்று பல பிரிவுகளிலும் படங்கள் வெளியாக உள்ளன. மெரி கிறிஸ்மஸ் – இயக்குனர் ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதியும், பாலிவுட் நடிகையான கத்ரீனா கைஃப்பும் இணைந்து நடித்துள்ளனர். நெட்ஃபிளிக்ஸில் தற்போது வெளியாக உள்ள […]

You May Like