Trump: அமெரிக்க கல்லூரிகளில் பயிலும் “ஹமாஸ் ஆதரவாளர்கள்” எனக் கருதப்படும் நபர்களின் மாணவர் விசாவை ரத்து செய்ய அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் இருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இப்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இது குறித்து, டொனால்டு டிரம்ப் கூறியதாவது: அமெரிக்காவில் உள்ள கல்லூரி வளாகங்களில் ஹமாஸ் ஆதரவாளர்கள் எனக் கருதப்படும் நபர்களின் மாணவர் விசா ரத்து செய்யப்படும். இந்த உத்தரவு விரைவில் அமலுக்கு வரும். அமெரிக்க யூதர்களுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல்கள், காழ்ப்புணர்ச்சி, தீ வைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும்.
ஹமாஸ் படையினருக்கு ஆதரவான போராட்டங்களில் கலந்து கொண்ட அனைத்து வெளிநாட்டினரையும் கண்டறியும் பணி நடந்து வருகிறது. நாங்கள் உங்களுக்கு அறிவிப்பை வழங்குகிறோம். நாங்கள் உங்களைக் கண்டுபிடிப்போம், நாங்கள் உங்களை நாடு கடத்துவோம். இவ்வாறு டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதற்கிடையே, அமெரிக்காவில் சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க டிரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அவர்களை ராணுவ விமானங்கள் மூலம் நாடு கடத்தும் நடவடிக்கையும் துவங்கி உள்ளது. இந்நிலையில், ‘அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 ஆயிரம் பேரை அடைத்து வைப்பதற்காக, முகாம் ஒன்றை திறக்கவும், டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.