fbpx

TET தேர்வுக்கு விண்ணப்பித்த நபர்களே… வரும் 27-ம் தேதிக்குள் இதை செய்து முடிக்க வேண்டும்…! இல்லை என்றால் உங்களுக்கு சிக்கல்…

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம்

இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் ஒன்று தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் 31 -ம் தேதி வரை முதற்கட்ட தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஏற்கனவே ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா சமிபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022-ம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. முதலில் மார்ச் மாதம் 14-ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவேற்றலாம் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் மாதம் 26-ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது. இவர்களுக்கான கம்ப்யூட்டர் வழி தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்பொழுது ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி முதல் 31 -ம் தேதி வரை உள்ள தேதிகளில் இடைநிலை ஆசிரியருக்கான தாள் ஒன்றுக்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதி சீட்டு வழங்கும் விவரம் ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என கூறி இருந்தார்.

இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் இன்று முதல் வரும் 27-ம் தேதி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம். அதே போல இனிவரும் காலத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான கால அவகாசம் தரப்படாது. இம்முறை தேர்வு எழுத 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர் என தேர்வு வரியம் தெரிவித்துள்ளது.

Also Read: பெற்றோர்களே கவனம்… குழந்தை தொழிலாளர் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகள்…!

Vignesh

Next Post

உஷார்.... Monkey pox சர்வதேச அவசரநிலையாக அறிவிப்பு...! இந்த அறிகுறி எல்லாம் இருந்தால் உங்களுக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி…!

Sun Jul 24 , 2022
குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. உலகெங்கிலும் அதிகரித்து வரும் குரங்கு காய்ச்சலுக்கு மத்தியில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் சனிக்கிழமையன்று குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தார். “இது குறித்து அவர் கூறியதாவது; இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு காய்ச்சல்  நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கு 5 பேர் வரை பலியாகி […]

You May Like