fbpx

அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி வாங்க முடியவில்லையா..? இந்த பொருளை வாங்கினாலே போதும்..!!

பொதுவாகவே இந்து மதத்தை பொறுத்த வரை அனைத்து விரதங்களும், பண்டிகைகளும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்து மக்களால் கொண்டாடப்படும் ஓர் மங்களகரமான நாள் தான் அட்சய திருதியை. இந்நாளில், லட்சுமி தேவியை வழிபடும் சிறப்பு மரபு உள்ளது. இது ஒவ்வொரு ஆண்டும் வைஷாக மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் திரிதியா திதியில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு அக்ஷய திருதியை மே 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் லட்சுமி தேவியை வழிப்பட்டால் அவர்களுடைய வாழ்வில் பணத்திற்கும், செல்வத்திற்கும் பஞ்சமே இருக்காது.

மாடு

அட்சய திருதியை நாளில் மாடுகள் வாங்குவது சிறந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் பசு மாடுகளை வாங்கி லட்சுமி தேவியின் பாதத்தில் காணிக்கையாக செலுத்தினால் வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும்.

மண் பானை

அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க முடியாவிட்டால், கண்டிப்பாக மண் பானையை வாங்குங்கள். இதனால், வீட்டில் செல்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

ஸ்ரீயந்திரம்

அட்சய திருதியை நாளில் ஸ்ரீயந்திரம் வாங்குவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நாளில், ஸ்ரீயந்திரத்தை வாங்கிய பிறகு, அதை வீட்டின் பூஜை இடத்தில் வைக்க வேண்டும். இதன் மூலம், லட்சுமி தேவி மற்றும் விஷ்ணுவின் ஆசீர்வாதங்களை பெறலாம்.

மஞ்சள்

அட்சய திருதியை நாளில் மஞ்சள் கடுகு வாங்குவது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. மஞ்சள் கடுக்காய் வாங்கினால் குடும்ப உறவில் இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

சங்கு

அக்ஷய திருதியை நாளில் சங்குகளை வாங்குவது சிறந்ததாக கருதப்படுகிறது. இதனால் அன்னை லக்ஷ்மியின் ஆசீர்வாதம் வீட்டில் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

Read More : கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவு..!! நிறுவனமே ஒப்புக்கொண்டதால் அதிர்ச்சி..!!

Chella

Next Post

இன்று முதல் எல்லாம் மாறிடுச்சு!… புது ரூல்ஸ்!... கவனம் மக்களே!

Wed May 1 , 2024
New rules: இன்று தொடங்கிவுள்ள மே மாதத்தில் நம்முடைய அன்றாட நிதிச் சூழலை நேரடியாகப் பாதிக்கும் வகையில் சில மாற்றங்கள் வந்துள்ளன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம். நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதம் முடிந்து மே மாதம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு மாதமும் பல்வேறு நிதி சார்ந்த விதிமுறைகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் இந்த மே மாதத்திலும் பல விதிகளில் மாற்றம் வந்துள்ளது. அவை உங்கள் பாக்கெட்டை நேரடியாக […]

You May Like