போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெல்லி போக்குவரத்து காவல்துறை வித்தியாசமான முயற்சியை எடுத்துள்ளது.
அதாவது, டெல்லி காவல்துறை தங்களின் பிரத்யேக செயலியை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சக வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால் புகார் அளிக்கலாம். இந்த செயலி மூலம் அளிக்கப்படும் புகார்களின் உண்மை தன்மையை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த செயலியை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த செயலி மூலம் புகார் தெரிவிப்போருக்கு வெகுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10,000 வரை வழங்கப்படும். டெல்லியின் லெப்டினன்ட் கவர்னர் வி.கே.சக்சேனா சமீபத்தில் டெல்லி போக்குவரத்து காவல்துறைக்கு மொபைல் செயலியின் செயல்பாட்டை மீண்டும் தொடங்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதில், அதிக புகார்களைக் கொண்டு முதல் இடத்தைப் பெறுபவருக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடித்தவருக்கு ரூ. 25 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்தவருக்கு ரூ. 15 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்தவருக்கு ரூ. 10,000 பரிசும் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் குறித்து புகார் அளிக்கப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து விதிமீறல்களும் குறையும் என நம்பப்படுகிறது.
Read More : தமிழ்நாட்டில் முதல்முறையாக..!! குரங்கம்மை பரிசோதனை மையம் தொடக்கம்..!! எங்கு தெரியுமா..?