fbpx

இதுல கூட விடமாட்டிங்களா?… பைக் டாக்ஸியில் நடந்த கொடுமை!… ஓடும் பைக்கில் இருந்து குதித்த இளம்பெண்!… வைரல் வீடியோ!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து பெண் ஓடும் பைக்கில் இருந்து குதித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூருவில், ஏப்ரல் 21 ஆம் தேதி இரவு, 30 வயதான பெண் ஒருவர் இந்திராநகருக்குச் செல்ல ரேபிடோ பைக் டாக்ஸியை புக் செய்தார். இரவு 11:10 மணியளவில் வந்த ஓட்டுநர் அப்பெண்ணை பைக்கில் ஏற்றி அழைத்துச் சென்றார். அப்போது பைக் ஓட்டுநர் ஓடிபி எண்ணை சரிபார்ப்பதாக கூறி பெண்ணின் செல்போனை வாங்கிக்கொண்டு பைக்கை வேறு இடம் நோக்கி ஓட்டியுள்ளார். இதனால் அப்பெண் ஓட்டுநரிடம் எச்சரித்ததோடு சத்தம்போடத்தொடங்கினார். ஆனால் ஓட்டுநர் அதனை பொருட்படுத்தாததால் அப்பெண் ஓடும் பைக்கிலிருந்து குதித்துள்ளார்.

இதை அடுத்து காவல்துறையினரிடம் அந்த பெண் புகாரளித்ததன் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் கைப்பற்றப்பட்டது. அதன்படி தீபக் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். வேகமாக செல்லும் பைக்கில் இருந்து பெண் குதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kokila

Next Post

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!... அதிகமாக பெட்ரோல் நிரப்பினால் வெடித்துவிடும்?... வைரல் செய்தியும்!... மத்திய அரசு விளக்கமும்!

Thu Apr 27 , 2023
வாகனங்களில் அதிகபட்ச கொள்ளளவு வரை பெட்ரோல் நிரப்ப வேண்டாம் என்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு வகையான போலி செய்திகள் வைரலாகி வருகின்றன. ஒவ்வொரு சூழலுக்கு ஏற்றவாறு போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. உதாரணமாக கோவிட் காலத்தில், பல்வேறு போலி செய்திகள் பரவியது. அதே போல் மத்திய அரசு, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு போலி தகவல்களும் பரவி […]

You May Like