fbpx

‘முடியலடா சாமி’..!! பிக்பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேறிய பவா செல்லதுரை..!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

பிக்பாஸ் சீசன் 7-வது நிகழ்ச்சி ஆகஸ்ட் 1ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் 40 நாட்களுக்கு பின் நடக்க வேண்டிய சண்டைகள், இந்த முறை முதல் வாரத்தில் இருந்தே நடந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், வயதான போட்டியாளர்களான பவா செல்லதுரை மற்றும் யுகேந்திரன் வாசுதேவன் நாமினேட் ஆன நிலையில், இருவரில் ஒருவர் தான் எலிமினேட் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால், எதிர்பாராத விதமாக அனன்யா வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் திடீர் ட்விஸ்ட் நிகழ்ந்துள்ளது. அதாவது எழுத்தாளர் பவா செல்லதுரை திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அந்தவகையில், வெளியான முதற்கட்ட தகவலின் படி அவர் உடல்நலப்பிரச்சனைகள் காரணமாக வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரின் இந்த முடிவு ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Chella

Next Post

Breaking | 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு..!! டிசம்பர் 3ஆம் தேதி முடிவுகள் வெளியீடு..!!

Mon Oct 9 , 2023
அடுத்த வருடம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தலுக்கான வியூகம் அமைக்கும் பணியில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியை அமைத்துள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலில் என்டிஏ, இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும். இந்நிலையில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடைகிறது. 5 […]

You May Like