fbpx

உன்னையும் விட்டுவைக்கலயா?… என்ன கூகுள் இதெல்லாம்!… ஊழியர்களை தொடர்ந்து ரோபோக்களும் பணிநீக்கம்!

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட், தனது தலைமையக உணவகத்தில் சுத்தம் செய்யும் பணி செய்துவரும் 100 ரோபோக்களை பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் நிறுவன அலுவலக வளாகத்தில் கதவை திறப்பது, டேபிள்களை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது என அன்றாட பணிகளை செய்ய சுமார் 100 ரோபோக்கள் பணியில் அமர்த்தப்பட்டன. ரோபோக்கள் எந்த மாதிரியான வேலையை செய்ய வேண்டும் என்பது அதில் பொருத்தப்படும் கம்ப்யூட்டர்களில் புரோகிராம்களாக எழுதப்பட்டு வடிவமைக்கப்பட்டன. இந்நிலையில், செலவைக் குறைக்கும் வகையில், உணவு விடுதி மேசைகளைச் சுத்தம் செய்யவும், குப்பைகளைத் தனித்தனியாகவும், கதவுகளைத் திறக்கவும் பயிற்சி பெற்ற ரோபோக்களை நீக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் தொடர்பு இயக்குனர் டெனிஸ் காம்போவா கூறுகையில், “தினசரி ரோபோக்கள் இனி எழுத்துக்களுக்குள் தனித் திட்டமாக இருக்காது. சில தொழில்நுட்பங்களும் குழுவின் ஒரு பகுதியும் கூகுள் ரிசர்ச்சில் இருக்கும் ரோபாட்டிக்ஸ் முயற்சிகளில் ஒருங்கிணைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், உலகெங்கிலும் உள்ள டுவிட்டர், மைக்ரோசாப்ட் மற்றும் யாகூ போன்ற நிறுவனங்கள் உட்பட தொழில்நுட்பத் துறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் செலவுகளைக் குறைக்க கடந்த ஆண்டு முதல் பணிநீக்கங்களைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

தவறுதலாக கூட இந்த உணவுகளை பாலுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.. பல பிரச்சனைகள் ஏற்படலாம்..

Mon Feb 27 , 2023
நம் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருட்களில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது.. பாலில் கால்சியம், அயோடின், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் டி ஆகிய பண்புகள் நிறைந்துள்ளன.. எனவே பால் உட்கொள்வதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.. ஆனால் பால் உட்கொள்ளும் போது பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நாம் தவறான கலவையில் பாலை குடித்தால் அது நம் உடலுக்கும் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். அந்த வகையில், […]
ஷாக்கிங் நியூஸ்..!! நாளை முதல் பால் விலை அதிரடி உயர்வு..!! தமிழக மக்கள் அதிர்ச்சி..!!

You May Like