காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விஷ்ணு என்ற இளைஞர், அவர் வசித்து வரும் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர், அடிக்கடி சிறுமியை நேரில் சந்தித்து, தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த விஷ்ணு, சிறுமியின் வீட்டிற்கு சென்ற தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார்.
அப்போதும் சிறுமி மறுத்ததால், அவரை துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால், சிறுமி தனக்கு நேர்ந்ததை பெற்றோரிடம் தெரிவிக்காமல் பயத்திலேயே இருந்துள்ளார். இந்த துயரம் நடந்து 80 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், சிறுமியின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையடுத்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இளைஞர் விஷ்ணுவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும், சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.