fbpx

கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை..!! மனைவி பிரேமலதா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என மனைவி பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி காய்ச்சல், சளி காரணமாக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருடைய உடல்நலம் குறித்து வதந்திகள் கிளம்பின. இதையடுத்து, தேமுதிக சார்பில் வெளியான அறிக்கையில், விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் மியாட் மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதில், விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. ஆனாலும், அவரது உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக சீராக இல்லை. அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் தொண்டர்கள் கவலையுடன் உள்ளனர். வெளியூர்களில் உள்ளவர்கள் சென்னைக்கு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், பலர் விஜயகாந்தின் உடல்நலம் பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேபோல், விஜயகாந்த் உடல்நலம் பூரண குணமடைய அரசியல் தலைவர்களும் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பிரேமலதா விஜயகாந்த் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “தேமுதிக சொந்தங்களுக்கும் கேப்டன் மீது பற்று வைத்திருக்கும் நல்ல உள்ளங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் என் பனிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த அறிக்கை வழக்கமான அறிக்கைதானே தவிர அதில் பதற்றப்படுவதற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றும் இல்லை.

கேப்டன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவரை மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள் குழு, செவிலியர்கள், நான் உள்பட அனைவரும் சிறந்த முறையில் பார்த்துக் கொள்கிறோம். வெகு விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பி உங்கள் அத்தனை பேரையும் நிச்சயம் சந்திப்பார். அத்தனை பேரின் பிரார்த்தனைகளும் அவர் செய்த தருமங்களும் நிச்சயம் தலைவரை காப்பாற்றும். எனவே கடைக்கோடி தொண்டர்களையும் கட்சி நிர்வாகிகளையும் நான் கேட்டுக் கொள்வது யாரும் பயப்பட வேண்டாம்.

அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார். அது எப்போது என்பதை நான் தெரிவிக்கிறேன். அதுவரை வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்பதை நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்“ என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

சைனிக் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு...! முழு விவரம்

Thu Nov 30 , 2023
இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்; நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, https://sainikschool.ncog.gov.in/ என்ற இணையதளம் வழியாக டிச.16-ம் தேதிக்குள் […]

You May Like