தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் தற்போது உடல்நலக்குறைவால், வீட்டிலேயே இருந்து வருகிறார். கட்சிப் பணிகள், பொது நிகழ்ச்சிகள் என எதிலும் அவர் கலந்து கொள்வதில்லை. ஏதாவது முக்கியமான விழாக்களில் மட்டும் தன்னுடைய தொண்டர்களை விஜயகாந்த் சந்திக்கிறார். இந்நிலையில், விஜயகாந்த்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அவருடைய மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு தேமுதிக செயல் தலைவர் பதவியை கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதோடு, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கு தேமுதிகவில் ஒரு முக்கிய பதவியை கொடுப்பதற்கு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தேமுதிகவில் இளைஞர் அணி செயலாளர் பதவியை பிரபாகரனுக்கு கொடுப்பதற்கு ஆலோசித்து வருவதாகவும், இது தொடர்பான அறிவிப்பு பிப்ரவரி மாதம் நடைபெறும் தேமுதிக கட்சியின் பொதுக்குழு கூட்டத்தின் போது வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.