மறைந்த நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவர் 1980 கள் மற்றும் 90களில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனுக்கு போட்டியாக முன்னணி கதாநாயகனாக விளங்கியவர். விஜயகாந்த் பத்துக்கும் அதிகமான படங்களில் நடிகை ராதிகா சரத்குமார் உடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இவர்கள் இருவரும் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்ட ராதிகா அவரிடமிருந்து விவாகரத்து பெற்று இருந்தார். அப்போது விஜயகாந்த்தும் ராதிகா சரத்குமாரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இருவரும் திருப்பதி சென்று திருமணம் செய்யவும் ஏற்பாடு செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன .
இதனை கேள்விப்பட்ட விஜயகாந்தின் உயிர் நண்பரும் தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் உடனடியாக கேப்டனை தொடர்பு கொண்டு பேசி ராதிகா மற்றும் விஜயகாந்த் திருமணத்தை தடுத்து நிறுத்தினார். மேலும் விஜயகாந்தின் தீவிர ரசிகையாக இருந்த பிரேமலதாவை விஜயகாந்த் இருக்கு திருமணம் செய்து வைத்தார். தமிழ் சினிமாவில் படர்ந்து வரும் நடிகராக இருக்கும் ஒருவர் விவாகரத்தான பெண்ணை திருமணம் செய்தால் அவரது இமேஜ் பாதிக்கப்பட்டு விடும் என்ற தனது நண்பனின் மீது இருந்த அக்கறையால் இந்த முடிவை எடுத்தார் இப்ராஹிம் ராவுத்தர்.
விஜயகாந்த் மற்றும் இப்ராகிம் ராவுத்தர் இருவரும் நட்பிற்கே இலக்கணமாக விளங்கியவர்கள். தங்களது சிறுவயது முதலே உயிர் நண்பர்களாக விளங்கிய இருவரும் சினிமாவிற்கு வந்த பின்பும் தங்களது நட்பை தொடர்ந்தனர். விஜயகாந்த் மிகப்பெரிய நடிகராக வளர்ந்ததில் இப்ராஹிம் ராவுத்தரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் சினிமாவில் நட்பிற்கு இலக்கணமாக விளங்கியவர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.