சினிமா மற்றும் அரசியலில் கொடி கட்டி பறந்தவர் கேப்டன் விஜய்காந்த். இவரது அனல் பறக்கும் பேச்சுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஆனால், இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். அதோடு வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடக்கிறார். இது அவரது கட்சித் தொண்டர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது.
அரசியல் நிகழ்வுகள் எதிலும் அவர் பங்கேற்பதில்லை. ஏதேனும் முக்கிய நிகழ்வுகளில் மட்டும் தலையை காட்டி வருகிறார். கேப்டன் என ரசிகர்கள், தொண்டர்கள் கொண்டாடியவர்கள் அனைவரும் கண்ணீர் சிந்தினாலும் இவர் திரும்புவார் என்று முழங்கி வருகிறார்கள். இதற்கிடையே, விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரை நேரில் பார்த்த தொண்டர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியது. அவர்கள் கூறுகையில், ”கேப்டன் உடல்நிலை பின்னடைவு தான். அவர் 100 வயது வரை நல்லா இருப்பாரு. அவர் பழைய மாதிரி பேச, நடக்க என்பவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இப்போதைக்கு பார்த்த வரையில் நல்லா இருக்கிறார். அத்துடன் கேப்டன் நலமடைய பிரார்த்தனை செய்து வருகிறோம்” என்றனர்.