வேலூர் மாவட்ட நீதிமன்றம் அருகே கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் உயிர் தப்பினார்.
திருவள்ளூர் அருகே திருநின்றவூரைச் சேர்ந்தவர் சதீஸ். வழக்கு தொடர்பான விசயத்திற்காக வேலூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார் அப்போது நீதிமன்றத்திற்கு வெளியே காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து காரை எடுத்துள்ளார். அப்போது புகை மூட்டம் கிளம்பியுள்ளது. அவசர அவசரமாக வெளியேற முயன்றபோது உள்ளேயே மாட்டிக் கொண்டார். இந்நிலையில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. அங்குள்ள மக்கள் கார் கண்ணாடியை உடைத்து சதீசை மீட்டனர். இதனால் அவர் உயிர் தப்பினார்.

தகவல் அறிந்து வந்த வேலூர் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். சத்துவாச்சாரி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் வாகனம் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. கடந்த 2 வாரங்களுக்கு முன்புதான் இந்த காரை வேறொரு நபரிடம் இருந்து விலைக்கு வாங்கியுள்ளார். இந்நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.