fbpx

நிலவில் கார் பந்தயம்!… எப்படி இருக்கும்?… AI புகைப்படம் வைரல்!

Moon: நிலவில் கார் பந்தயம் நடந்தால் எப்படி இருக்கும் என்று AI உருவாக்கிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

விண்வெளியில் பூமிக்கு மிக அருகில் இருப்பது நிலவு மட்டும் தான். அதனால் தான் நிலவு குறித்த ஆராய்ச்சியில் உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. 1958 முதல் இன்று வரை கிட்டத்தட்ட 140 முறை நிலவுக்கு உலக நாடுகள் விண்கலத்தை அனுப்பியுள்ளன. அதில் வெகு சில திட்டங்கள் தான் மனிதர்களை உள்ளடக்கியவை. பெரும்பாலானவை ஆர்பிட்டர்கள், லேண்டர்கள் மற்றும் ரோவர்களைக் கொண்டவை தான். தற்போது வரை நிலவில் விண்கலங்களின் புகைப்படங்கள் மட்டுமே நம்மால் பார்க்கமுடியும்.

ஆனால் AI தயாரித்த புகைப்படத்தில், நிலவில் கார் பந்தயம் நடந்தால் எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஸ்போர்ட்ஸ் கார்கள் மூலம் பந்தயம் நடப்பது குறித்து ஏஐ உருவாக்கிய புகைப்படத்தில் நாம் காணலாம். இந்த படங்கள் அனைத்திலும் வெவ்வேறு வண்ண கார்கள் காணப்படுகின்றன. பூமியில் கார் பந்தயம் எப்படி நடக்கிறதோ அதே மாதிரி கார் பந்தயமும் ஏஐ உருவாக்கிய புகைப்படத்தில் காணப்படுகிறது.

இப்போது சாத்தியமில்லை என்றாலும், அறிவியலால் எதிர்காலத்தில் எதுவும் சாத்தியமாகும். தற்போது, ​​AI படத்தைப் பார்த்தாலே, நிலவில் கார் ஓட்டும் காட்சி எப்படி இருக்கும் என்பது தெளிவாகிறது.

Readmore: இளைஞர்களே..!! நல்ல சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!! விண்ணப்பிக்க டைம் இல்ல..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Kokila

Next Post

Tamilanadu: மீண்டும் பாஜக ஏன் வரவே கூடாது...? பட்டியல் போட்ட முதல்வர் ஸ்டாலின்...!

Tue Apr 16 , 2024
பாஜக ஏன் வரவே கூடாது? என முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு […]

You May Like