உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் ஒவ்வொரு நாளும் 1 மில்லியனுக்கும் அதிகமான பாலியல் மூலம் பரவும் நோய்த் தொற்றுகள் (STI) நிகழ்கின்றன, அவற்றில் பெரும்பாலானவை அறிகுறியற்றவை. பாலியல் நோய்த் தொற்றுகள், எந்த வகையான உடலுறவின் மூலமாகவும் பரவலாம். இது பாதிக்கப்பட்ட ரத்தத்தின் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கடத்தப்படுகிறது. உதாரணமாக, இன்ட்ரவெனஸ் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களில், ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அதே ஊசியைப் பகிர்ந்துகொள்வது மற்ற நபருக்கு தொற்றுநோயைப் பரப்பும். இருப்பினும், கைக் கொடுப்பது, உடைகளைப் பகிர்ந்துகொள்வது அல்லது கழிப்பறை இருக்கைகள் மூலம் பாலியல் நோய்த் தொற்றுகள் பரவுவதில்லை என்று குறிப்பிடப்படுகிறது.
உடலுறவு இல்லாமலேயே பாலியல் நோய்த் தொற்றுகள் (STI) வருவதற்கான சில வழிகளும் உள்ளன. முத்தம் நோயான மோனோநியூக்ளியோசிஸைத் தவிர (mononucleosis), oral herpes நோயால் உங்கள் துணை பாதிக்கப்பட்டிருந்தால், அவருடன் தொடர்பு கொள்வதன் மூலம் அது உங்களுக்கும் வரலாம். இது லிப் பாம், குடிநீர் பாத்திரங்கள் மற்றும் சாப்பாடு பாத்திரங்களுக்கும் பொருந்தும். எனவே நீங்கள் யாருடன் உமிழ்நீரை மாற்றுகிறீர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். இதேபோல், ஹெர்பெஸ் வைரஸ்- தோல் அல்லது உமிழ்நீர் போன்ற உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது. எனவே பாதிக்கப்பட்ட நபரை முத்தமிட்டால் வைரஸால் பாதிக்கப்படலாம்.
மேலும், பாதிக்கப்பட்ட ரத்தத்தின் மூலம் பாலியல் நோய்த் தொற்றுகள் பரவக்கூடும் என்பதால், HIV, ஹெபடைடிஸ் பி மற்றும் சி போன்ற ரத்தத்தில் பரவும் நோய்த்தொற்றுகளும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் பிசிக்கல் உடலுறவில் ஈடுபடாவிட்டாலும், மற்றொரு நபரின் உடல் திரவம் அல்லது பிறப்புறுப்புகளுக்கு உங்களை வெளிப்படுத்தும் எதுவும் – அது சுயஇன்பம், வாய்வழி உடலுறவு அல்லது வைபிரேட்டர்ஸ் மற்றும் பிற சாதனங்களைப் பகிர்வது போன்றவை STI நோயால் பாதிக்கப்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். மேலும் காது, மூக்கு குத்துதல், பச்சை குத்துதல், ஷேவிங் மூலம் பாலியல் நோய்த்தொற்றுகள் பரவலாம்.