சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தனி முன் அன்சாரி (37) இவர் சென்னை வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மை பிரிவு தலைவராக இருக்கிறார். அதோடு, பழைய வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு ஜி ஏ ரோடு வட்டார வியாபாரிகள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
அத்துடன் இவருக்கு சமீபத்தில் தான் திமுக தலைமை மாவட்ட அளவிலான பொறுப்பு வழங்கி இருந்தது. இதற்கு வாழ்த்து தெரிவித்து அவருடைய ஆதரவாளர்கள் அந்த பகுதியில் பேனர் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ராயபுரம் கிழக்கு பகுதி 51 வது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசனுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் ஜெகதீசனுக்கும், தமிமுன் அன்சாரிக்கும் இடையில் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே தமிமுன் அன்சாரியின் பேனரை சென்ற 12ஆம் தேதி ஜெகதீசன் சேதப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக ராயபுரம் காவல் நிலையத்தில் தமிமுன் அன்சாரி புகார் வழங்கியுள்ளார். அதன் பெயரில் காவல் ஆய்வாளர் மாரியப்பன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இந்த புகார் உண்மை என்பது தெரிய வந்தது. ஆகவே திமுகவின் பெண் கவுன்சிலரின் கணவர் ஜெகதீசன் மற்றும் அவருடைய ஆதரவாளர்களான 6 பேர் மீது மிரட்டல், ஆபாசமாக பேசுதல் போன்ற 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தற்போது வடக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஜெகதீசன் வியாபாரிகளிடம் மாமுல் பெற்ற விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் இவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரு மாதங்களுக்கு முன்பு ரோந்து பணிக்காக சென்ற காவலர் ஒருவரை மிரட்டிய விவகாரம் குறித்து ஜெகதீசன் மீதும், அவருடைய நண்பர்கள் மீதும் வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதே போல இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டு கொள் இருக்கின்றனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.