fbpx

எடப்பாடி தொடர்ந்த வழக்கு..!! ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிரடி தடை..!! ஐகோர்ட் பரபரப்பு உத்தரவு..!!

அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஸ்-க்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘அதிமுக பொதுச்செயலாளராக என்னை உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளன.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் என்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கூறிவருவதுடன், அதிமுகவின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்தி வருகிறார். இதனால் தொண்டர்களிடையே குழப்பம் நிலவுகிறது. எனவே அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 7ஆம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்தது. அதன்படி, இந்த வழக்கு மீண்டும் நீதிபதி சதிஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டும் அதே பதவியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருகிறார் என இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதையடுத்து எத்தனை முறை இப்படி வழக்கு தொடர்வீர்கள்? நேரம் கேட்பீர்கள்? எத்தனை முறை ஒரே வாதத்தை வைப்பீர்கள்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

Chella

Next Post

’வாரத்துல 3 நாள் கட்டாயம் ஆபீஸ்க்கு வரணும்’..!! ஊழியர்களுக்கு கட்டளையிட்ட விப்ரோ நிறுவனம்..!!

Tue Nov 7 , 2023
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த காலத்தில் மக்கள் தொடர்புகளைத் தடுக்க உலக நாடுகள் முழு ஊரடங்கு அறிவித்தன. இதன் காரணமாக நிறுவனங்கள் தங்கள் பொருளாதாரம் பாதிக்காமல் இருக்க ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதித்தது. இது ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் தொடர்ந்து வருகிறது. ஒரு சில நிறுவனங்கள் படிப்படியாக ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைத்துவிட்டனர். ஒரு சில நிறுவனங்கள், வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து வேலை செய்யும் ஹைபிரிட் முறைகளை […]

You May Like