fbpx

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய விவகாரம்!… ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அபராதம்!… நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி!

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய விவகாரத்தில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் கொப்பலைச் சேர்ந்த ஹர்ஷா என்ற மாணவர் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான ஃபிளிப் கார்டில் ( Flipkart)கடந்த 2021ம் ஆண்டு ஐபோன் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வந்த ஆர்டருக்கான பார்சலை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார். அதில் ஐபோனுக்கு பதில் 140 கிராம் எடையுள்ள நிர்மா சோப் மற்றும் சிறிய கீபேட் போன் அதில் இருந்தது. ஆனால் ஐபோனுக்காக ரூ.48, 999 மாணவர் ஹர்ஷா செலுத்தியிருந்தார். இதனை பார்த்து மனவேதனை அடைந்த அந்த மாணவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட நபருக்கு ஃபிளிப்கார்ட் மற்றும் அதன் சில்லறை விற்பனையாளருக்கு ரூ.25000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. மேலும், “இப்போது ஆன்லைன் ஷாப்பிங் எல்லா இடங்களிலும் பரவி வருகிறது, ஏனெனில் இது நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது. ஆனால் தயாரிப்புகளை விற்ற பிறகு நிறுவனங்களின் பொறுப்புகள் முடிவடையாது. ஏனெனில் இது அந்நிறுவனத்தின் கடமையாகும். நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி, அவர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்காக தவறான பொருட்களை/தயாரிப்புகளை அனுப்புவதன் மூலமோ, நுகர்வோரின் பணத்தை அபகரிக்க எந்த உரிமையும் கிடையாது” என்று ஆணையம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

Kokila

Next Post

வரும் 27-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..‌.! வானிலை மையம் கணிப்பு...!

Fri Mar 24 , 2023
தமிழகம் மற்றும், புதுச்சேரி பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]

You May Like