fbpx

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு…!

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சந்தேகத்திற்கிடமான பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள், இலவசங்கள் மற்றும் கடத்தப்பட்ட பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை தடுக்க சோதனைகளை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் , மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது, மத வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது போன்ற விதிமுறைகள் உள்ளன. இந்த நிலையில் விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

செம குட் நியூஸ்..!! மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை..!!

Mon Apr 8 , 2024
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்றுடன் (ஏப்ரல் 8) முடிவடைகிறது. இதனையடுத்து, நாளை முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜூனியர்களும், ஆசிரியர்களும் பிரியா விடை அளிக்க உள்ளனர். அடுத்தக் கட்டமாக 10ஆம் வகுப்பு மாணவர்கள், 11ஆம் வகுப்பு அல்லது பல்தொழில்நுட்ப படிப்புகளுக்கு தயாராக உள்ளனர். Read More : பெற்றோர்களே உஷார்..!! யாரையும் நம்பாதீங்க..!! […]

You May Like