fbpx

தொண்டர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும்!… தெலங்கானா காங்., தலைவர் சர்ச்சை பேச்சு!

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், கட்சித் தொண்டர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறப்படும்” என தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 30ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும்கட்சியான பி.ஆர்.எஸ்., எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய 3 கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதையடுத்து அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தெலங்கானா மாநிலம் உருவானது முதல் தொடர்ந்து 2 முறை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரசேகர ராவ், 3வது முறையாக வென்று ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளார். அதேநேரத்தில், அவருக்குப் போட்டியாக எதிர்க்கட்சிகள் மாறிமாறி விதவிதமான தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி, “காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், கட்சித் தொண்டர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறப்படும்” என உறுதியளித்தார். இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால், கட்சித் தொண்டர்கள் மீது போடப்பட்ட அனைத்துப் பொய் வழக்குகளும் திரும்பப் பெறப்படும். ஆளுங்கட்சியின் தவறான செயல்களை, கட்சித் தொண்டர்கள் அச்சமின்றி எடுத்துரைக்க வேண்டும். நவ. 30ஆம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக அணிவகுத்து உள்ளன” எனத் தெரிவித்தார்.

Kokila

Next Post

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு…! மொத்தம் 190 காலியிடங்கள்… உடனே விண்ணப்பிக்கவும்…!

Tue Nov 14 , 2023
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் கொங்கன் இரயில்வேயில் Trainee Apprentices பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 190 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 47 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த பணியில் சேருவதற்கு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.9,000 மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் டிசம்பர் 12-ம் தேதி […]

You May Like