Money seized: சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை புறப்பட்ட விரைவு ரயில் தாம்பரத்தில் நின்றபோது தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணி அளவில் நெல்லை எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட இருந்தது. இந்தநிலையில், பல கோடி ரூபாய் பணத்தை கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ரயிலின் குளிர் சாதன பெட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 6 பைகளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.4.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பணத்துடன் பிடிபட்ட 3 பேரையும் தாம்பரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என்பதும் தேர்தல் செலவுக்காக சென்னையில் உள்ள அவரது ஹோட்டலில் இருந்து இப்பணத்தை கொண்டு செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது.
Readmore: ரேஷன் கார்டுக்கு பிராண்டட் சரக்கு இலவசம்!… சர்ச்சையை கிளப்பிய பெண் வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி!