fbpx

’தேசியக்கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு’..! மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..!

சுதந்திர தினத்தன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைக்கும்போது, சாதிய பாகுபாடு இன்றி நிகழ்ச்சி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பான கடிதத்தில், “சுதந்திர தின விழாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைப்பது மரபாகும். ஒரு சில கிராம ஊராட்சிகளில், சாதியப் பாகுபாடுகள் காரணமாக தேசியக் கொடியை ஏற்றுவதில் பிரச்சனைகளோ, தேசியக் கொடியையும், அதனை ஏற்றுபவரையும் அவமதிக்கும் செயலோ நடைபெறலாம் என தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

’தேசியக்கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு’..! மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..!

தீண்டாமை காரணமாக எழும் எந்த ஊனத்தையும் அமல்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனைக் கருத்தில் கொண்டு, சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளின் தலைமை அரசு அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். அதுபோல, அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்திலும், எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் கலந்து கொள்வதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

’தேசியக்கொடி ஏற்றுவதில் சாதிய பாகுபாடு’..! மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு..!

மேலும், இதனை செயல்படுத்துவதில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின், போதுமான காவல்துறையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். இந்தப் புகார்களைக் கையாள ஒரு குறிப்பிட்ட கைப்பேசி உதவி எண் அல்லது ஒரு அலுவலரோ அறிவிக்கப்படலாம். இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஓர் அறிக்கையினை அரசுக்கு வருகிற 14ஆம் தேதி மாலைக்குள் வந்து சேருமாறும், சுதந்திர தின விழா நிறைவுற்றதும், அது குறித்த அறிக்கையை 17ஆம் தேதிக்கு அனுப்பி வைக்குமாறும் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்”.

Chella

Next Post

25 நாட்களுக்கு ரூ.2.5 கோடி தொலைபேசி கட்டணம் விதித்த BSNL..! - ஈஷா விளக்கம்

Fri Aug 12 , 2022
25 நாட்களுக்கு ரூ.2.5 கோடி என்ற பி.எஸ்.என்.எல்லின் தவறான கட்டண விதிப்பு குறித்து ஈஷா விளக்கம் அளித்துள்ளது. டிசம்பர் 2018 – ஜனவரி 2019 காலத்தில் வெறும் 25 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி பயன்பாட்டிற்கு ரூ.2.5 கோடி கட்டணம் செலுத்த வேண்டும் என பி.எஸ்.என்.எல். (BSNL) நிறுவனம் தவறாக ரசீது அனுப்பியிருந்தது. ஈஷா யோகா மையத்தின் மாத உச்ச வரம்பே (Credit limit) வெறும் ரூ.66,900 ஆக இருக்கும் நிலையில், […]
25 நாட்களுக்கு ரூ.2.5 கோடி தொலைபேசி கட்டணம் விதித்த BSNL..! - ஈஷா விளக்கம்

You May Like