fbpx

’தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு’..!! சோனியா காந்தி சொன்னது என்ன..? கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி..!!

கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவர் சுப்ரியா சுலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

திமுகவின் மகளிர் அணி சார்பாக நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க 5 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தமிழ்நாடு வருகை தந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சோனியா காந்தியை சந்தித்து தமிழ்நாடு அரசியல் சூழல், தொகுதிகள் எதிர்பார்ப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் , மாணிக்கம் தாகூர் எம்பி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, ”காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் நீண்ட நேரம் உரையாட வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தின் ஒவ்வொரு அரசியல் கட்சியின் செல்வாக்கு குறித்தும், தமிழகத்தின் அரசியல் சூழல் மற்றும் வாக்கு வங்கி குறித்தும் எடுத்துரைத்தோம். குறிப்பாக, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ஆதரித்து பேசினார். காங்கிரஸ் இயக்கத்தை எப்படி வலுப்படுத்த வேண்டும். நம் தோழமை கட்சியோடு எவ்வாறு நட்பு பாராட்ட வேண்டும், அவர்களையும் சேர்த்து எவ்வாறு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து எல்லாம் பேசினார்” என்று தெரிவித்தார்.

Chella

Next Post

இஸ்ரேலில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர்..? தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

Sat Oct 14 , 2023
இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழ்நாடு அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”இஸ்ரேல் போர் தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் ஆணைக்கினங்க தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. இவர்களில் முதற்கட்டமாக […]

You May Like