சி.பி.எஸ்.இ. ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் ’சாதிவெறி ’ தொடர்பான கருத்துக்கள் இடம்பெற்றது குறித்து சி.பி.எஸ்.இ. தலைமை விளக்கம் அளித்துள்ளது.
சி.பி.எஸ்.இ. தேர்வுமற்றும் வழிகாட்டுதல் மற்றும் தேர்வு அமைப்பு வாரியமாக செயல்பட்டுவருகின்றதே தவிற பாடப்புத்தகங்களை வெளியிடுவதில்லை. நாடுமுழுவதும் உள்ள பள்ளிகளில் NCERT என்ற பாடத்திட்டத்தின்படியே 9 முதல் 12ம் வகுப்பு வரை பின்பற்றப்படுகின்றது.
மத்திய இடைநிலைக் கல்வி (சி.பி.எஸ்.இ) இது தொடர்பாக டுவிட்டரில் சாதி வெறி என்ற வைரலான கருத்துக்கள் குறித்து விளக்கம் அளித்துள்ளது. 6-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வர்ண முறைகள் இடம்பெற்றுள்ளது. அதில் சாதிவெறி பற்றிய வாசகம் இம்பெற்றுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளி வந்தது.
ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வர்ணா என்ற தலைப்பில் வரலாற்று பாடப்புத்தகத்தில் சி.பி.எஸ்.இ. ஆல் வெளியிடப்பட்டதாக தவறாக கூறப்பட்டுள்ளது. இது பொய்யான தகவல் . தேசிய அளவிலான கல்வி வாரியத்தின் டுவீட். நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் மற்றும் தமிழகத்தின் இரண்டு முக்கிய கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட தலைவர்கள் இதறகு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.