fbpx

தங்கம் போல காஸ்ட்லி..!! தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்த வியாபாரி..!! வைரல் வீடியோ..!!

நாடு முழுவதும் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. வழக்கமாக ஜூலை – ஆகஸ்ட் மாதத்தில் தக்காளி விலை சற்று உயர்வது வழக்கம் தான் என்ற போதிலும் இந்த ஆண்டு தக்காளி விலை கிடு கிடுவென உயர்ந்து மக்களை அதிரவைத்து வருகிறது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 10 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. ஆனால், தற்போதோ தக்காளி விலை விறு விறுவென உயர்ந்து கொலோ 150 ரூபாயை எல்லாம் தாண்டியது.

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த தக்காளி விலை உயர்வு ஓட்டல்களையும் பாதித்துள்ளது. பல ஓட்டல்களில் தக்காளி சட்டினியை நிறுத்தி விட்டனர். சாலையோர உணவகங்களிலும் தக்காளி சட்டினியை கண்ணில் காட்டுவது இல்லை. தக்காளி வாங்குவதை பாதியாக குறைத்து விட்டதாகவும் சில ஓட்டல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் காய்கறி கடையை நடத்தி வரும் வியாபாரி அஜய் ஃபவுஜி, தக்காளியை வாங்க வரும் மக்கள், மோதலில் ஈடுபடுவதாலும், சிலர் தக்காளியைத் திருடிச் செல்வதாலும் பவுன்சர்களின் சேவையை நாடியுள்ளதாகக் கூறியுள்ளார். அதேபோல், தக்காளி ஒரு கிலோ 160 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், மக்கள் 50 முதல் 100 கிராம் வரையில் மட்டுமே தக்காளியை வாங்கிச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், டெல்லி, ஹரியானா, அசாம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஜம்மு- காஷ்மீர், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பூண்டு, இஞ்சி, எண்ணெய், பருப்பு வகைகள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்டப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/PTI_News/status/1677975663125340161?s=20

Chella

Next Post

ஹர்மன்பிரித் கவுர் அதிரடி!... முதல் டி20 போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்திய அணி!

Mon Jul 10 , 2023
வங்காள தேசத்திற்கு எதிரான முதல் டி 20 போட்டியில் கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் அதிரடி ஆட்டத்தால் இந்திய பெண்கள் அணி வெற்றிபெற்றது. வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. […]

You May Like