பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் பூனைகளை வளர்ப்பு பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். ஆனால் இந்த பூனைகள் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. ஆம். இந்த வளர்ப்பு பூனைகள் பன்றிகளைப் போல ஆபத்தானவை என்பதை சமீபத்திய ஆய்வு முடிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும் இந்த பூனைகள் அடுத்த பெருந்தொற்றை தூண்டக்கூடும் என்றும் ஆய்வு எச்சரிக்கிறது.
டெய்லர் மற்றும் ஃபிரான்சிஸ் ஆன்லைன் என்ற கல்வி இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில், H5N1 பறவைக் காய்ச்சலை, வளர்ப்பு பூனைகள் மனிதர்களுக்கு பரப்பலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. வீட்டில் வளர்ப்பு பிராணிகளாக வளர்க்கப்படும் பூனைகள் மனிதர்களுக்கு காய்ச்சல் பரவுவதற்கு காரணமாக அமைகின்றனர். மேலும், பறவை வைரஸ்களை மக்களுக்கு மீண்டும் பரப்புவதற்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு பூனைகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?
பன்றிகளில் காணப்படும் செல்லுலார் ஏற்பிகளை பூனைகளும் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதாவது இந்த செல்லுலார் ஏற்பிகள் ‘பறவை மற்றும் பாலூட்டிகளின் காய்ச்சல் வைரஸ்களை மறுசீரமைப்பதற்கான கலப்பு பாத்திரங்களாக செயல்படுகின்றன.
H5N1 பறவைக் காய்ச்சலால் சமீபத்தில் இறந்த பூனைகள், இந்த வைரஸை மனிதர்களுக்கு பரப்பக்கூடும் எனவும், அவற்றில் ‘தனிப்பட்ட பிறழ்வுகள்’ இருப்பதைக் கண்டறிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பன்றிகள் பொது சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல்களாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் அவற்றின் செல்கள் வைரஸ்கள் கலந்து பிறழ்ந்து, புதிய விகாரங்களை உருவாக்கி, மனித தொற்றுநோய்களை உண்டாக்கும் திறன் கொண்டவை. இப்படித்தான் 2008-ம் ஆண்டு H1N1 பன்றிக்காய்ச்சல் தொற்றுநோய் தொடங்கியது. ஆனால் தற்போது பூனைகள் பன்றிகளை போலவே ஆபத்தானதாக இருக்கலாம் என்பது இந்த புதிய ஆய்வில் தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆய்வின் ஆசிரியர்கள் இதுகுறித்து பேசிய போது “மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களுடன் பூனைகள் அடிக்கடி தொடர்பு கொள்கின்றன. எனவே ‘H5N1 வைரஸ்களை மனிதர்களுக்கும், மற்ற இனங்களுக்கும் பரப்புவதற்கான பாலமாக பூனைகள் செயல்பட முடியும். குறிப்பாக பூனைகளில் H5N1 வைரஸின் தொடர்ச்சியான வெளிப்பாடு, வைரஸ் சுழற்சி ஆகியவை பரவுதல் மற்றும் பொது சுகாதாரத்திற்கான குறிப்பிடத்தக்க கவலைகளை எழுப்புகின்றன” என்று தெரிவித்தனர்.
ஆய்வின் ஒரு பகுதியாக, ஆராய்ச்சியாளர்கள் 10 பூனைகளுக்கு பிரேத பரிசோதனை செய்தனர். அவற்றில் ஒன்று அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் H5N1 நோயால் இறந்த 6 மாத பூனைக்குட்டியாகும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறந்த பறவைகளின் எச்சங்களை சாப்பிட்ட பிறகு, பூனையின் மூளை, நுரையீரல் மற்றும் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், பறவை காய்ச்சலுக்கு ஆளாகின்றன என்பது தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் இதுகுறித்து பேசிய போது “பாதிக்கப்பட்ட பூனைகள் முறையான நோய்த்தொற்றுகளை உருவாக்கி, சுவாசம் மற்றும் செரிமானப் பாதைகள் மூலம் வைரஸை வெளியேற்றி, மனிதர்களுக்கு வெளிப்படுவதற்கான பல வழிகளை உருவாக்குகிறது.
பூனையின் மாதிரிகள் இருக்கும் வைரஸின் நிலைத்தன்மையும் மாற்றியமைக்கும் திறன் வளரும் அபாயத்தை அதிகரிக்கிறது. அதிகரித்த பரவும் தன்மை கொண்ட விகாரங்களாக, ஆழ்ந்த பொது சுகாதார தாக்கங்களுடன் வளர்ந்து வரும் விலங்கு தொடர்பான நோய்களின் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.” என்று தெரிவித்தனர்.
Read More : இந்த சிம்பிள் விஷயங்களை செய்தாலே போதும்… உங்களுக்கு பக்கவாதம், இதய நோய்கள் எல்லாம் வரவே வராது…!