fbpx

ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு..!! மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பரபரப்பு பேட்டி..!!

ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோர விபத்தில் 300 பேர் பலியானதாக கூறப்படுகிறது. 900-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கூட பலியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டு தண்டவாளத்தை சரி செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, ரயில் விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்த உயர்மட்ட அளவிலான விசாரணை நடந்து வருகிறது. சம்பவ இடத்தில் இன்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேற்பார்வை செய்தார். அப்போது அவர் பேசுகையில், ”ஒடிசா ரயில் விபத்துக்கான மூலக்காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேற்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். தற்போது தண்டவாளம் சீரமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தண்டவாளத்தை புதன்கிழமை காலைக்குள் சீரமைத்து விட வேண்டும் என செயல்பட்டு வருகிறோம்.

விபத்து நடந்த இடத்தில் இருந்து அனைத்து உடல்களும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை அறிக்கை விரைவில் கிடைக்கும். இருப்பினும் நாங்கள் விபத்துக்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளோம். விபத்துக்கு பொறுப்பானவர்களும் கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். மின்னணு இண்டர் லாக்கிங் சிஸ்டத்தால் ஏற்பட்ட மாற்றத்தால் இது நடைபெற்றுள்ளது. தற்போது மறு சீரமைப்பு பணிகளில் தான் எங்கள் முழு கவனமும் உள்ளது.

கவச் பாதுகாப்பு அமைப்புக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. மின்னணு இண்டர் லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் இது நடந்துள்ளது” என்றார். இதன்மூலம் ஒடிசா ரயில் விபத்துக்கு மின்னணு இண்டர் லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட குளறுபடி தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

ஒடிசா ரயில் விபத்து..!! நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்..!! ரூ.5 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம்..!!

Sun Jun 4 , 2023
ஒடிசாவின் பால்சோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 300 பேர் உயிரிழந்த நிலையில், 900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட ஒடிசாவைச் சேர்ந்தவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த மாநிலத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 1 […]

You May Like